Palakaddu tour 2013





ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மகிழ்ச்சியான அனுபவம், அனுபங்களையும், இயற்கையையும் தேடிய எங்களது பயணம் இந்த முறை கேரளா மாநிலம் பாலக்காடு நோக்கி 15.11.2013 அன்று இரவு பயணமனோம் வழக்கம்போல் அல்லாமல் அனைவருமே குறித்த நேரத்தில் சென்னை சென்ரலில் வந்தடைந்தார்கள்.

16.11.2013 காலை 5.45 மணிக்கெல்லாம் பாலக்காடு இரயில் நிலையம் வந்தடைந்தோம். காலை 8 மணிக்கெல்லாம் அனைவரும் காலை உணவை முடித்துக்கொண்டு நெல்லியம்பதி நோக்கி பயணித்தோம். வழியெங்கும் வயல்வெளிகளும், மலைமுகடுமாய் இயற்கையை ரசித்த வண்ணம் வண்டி மேல்நோக்கி பயணமானது பல கொண்டைஊசி வளைவுகள் உள்ளதால் சிலருக்கு உடல் உபாதைகள் நேரிட்டது.  போகும் வழியில் பூத்தாண்டி அணைக்கட்டைப் பார்வையிட்டோம். அங்கே சிறிய கடையில் சார்பத், மற்றும் சோட சார்பத் வாங்கி குடித்தோம். நெல்லியம்பதி அரசு பண்ணைக்கு மதியம் 12 மணியளவில் சென்றடைந்தோம். பேஸன் பூருட் அனைவரையும் கவர்ந்தது. பூ வகைளையும் அழகிய ஆரஞ்சு தோட்டங்களையும் கண்டு மகிழ்ந்தோம்.

மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டோம். அங்கிருந்து ஜிப்பில் டிரக்கிங் செல்வதற்காக அனைவரும் ஆரவமுடன் சென்றார்கள். எனது மனைவியின் உடல்நிலை ஒத்துழைக்காததால் நான் போகவில்லை. எனது மகனை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்தேன். கணியனும் அவரது அம்மாவும் போகவில்லை.

நெல்லியம்பதி பயணத்தை முடித்துக்கொண்டு இரவு 6 மணிக்கெல்லாம் ஒட்டல் அறைக்கு வந்துவிட்டோம். 17.11.2013 அன்று காலை 7.30 மணிக்கு அனைவரும் ஒட்டல் அறையை காலிசெய்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு பாலக்காடு திப்புசுல்தான் கோட்டையில் உள்ள கோயிலும் மற்றும் கோட்டையையும் சுற்றிப் பார்த்தோம். அங்கு இருந்த பப்பாளி மரம் என்னை மிகவும் கவர்ந்தது.

அங்கிருந்து 10.30 மணியளவில் மலம்புழா அணைகட்டு நோக்கி பயணித்தோம். நான் பலமுறை அங்கு சென்றிருந்தாலும். இந்தமுறை குடும்பத்துடன் செல்வதால் சற்று வித்தியாசமாக இருந்தது. மேலும் தற்போது அணைக்கட்டை சுற்றியுள்ள பூங்காவை சீரமைத்துள்ளார்கள். பார்க்க அழகாக இருந்தது.

மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம். நல்ல மழை கொஞ்சம் நேரம் பெய்தது. மாலை 5 மணிக்கெல்லாம் பாலக்காடு ரயில் நிலையம் வந்தடைந்தோம். பாலக்காடு நகரில் சில பொருட்களை வங்கிக்கொண்டோம்.
  • கெமி குடும்பத்துடன் வழக்கமான உற்சாகமுடன் செயல்பட்டார்.
  • நாகராஜ் தனது மகளை பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது என்று நினைக்கிறேன். மகளின் மழலைப் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
  • பாலாஜி, சங்கர் இருவரும் வழக்கமான உற்சாகத்துடனும், அதிக செலவு ஆகாமலும் பார்த்துக்கொண்டார்கள்.
  • சுனில், விமல், நவீன், கார்த்திக் அனவைரும் எங்களுடனான சுற்றுலாவிற்கு புதியவர்கள் என்பதால் இயல்பாகவே எல்லாருடனும் பழகினார்கள். அதிக நேரம் புகைப்படம் எடுப்பதில் செலவிட்டார்கள்.
  • கணியன் இந்த முறை சுற்றுலா ஏற்பாட்டில் முழுமனதுடுன் செயல்பட்டதால் எனக்கு பணிச்சுமை குறைந்தது. கணியன் அம்மா அனைவருடனும் அன்பாக பழகினார்.

Comments

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts