Posts

Valpari & topsilip 2014

Image
வால்பாறை டாப்சிலிப் 17.10.2014
இரவு பழனி இரயிலுக்கு அதிசயமாக அனைவருமே முன்னதாகவே வந்துவிட்டார்கள். இரவு எங்கள் பயணம் தொடங்கியது, 18.10.2014 அன்று காலை பழனி இரயில் நிலையத்தை வந்தடைந்தோம். பழனி கோயில் எங்கள் பயண திட்டத்தில் இல்லை என்பதால் வண்டியில் இருந்தபடியே கோயிலை தரிசித்தார்கள்.
18.10.2014
குரங்கு அருவி
இயற்கையின் வெள்ளோட்டத்தில் அனைவரும் நனைந்துமகிழ்ந்தனர். சிலர் குளிக்க மனம் இன்றி இருந்தனர். அவனைவரின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ள அவர்களும் குளிக்கத் தொடங்கினார்கள். இதனால் கால விரயம் தான் ஏற்பட்டது. அனைவரின் குளியலை முடித்துக்கொண்டு வால்பாறை நகரத்தைச் சென்றடைந்தோம் மதியம் உணவிற்கான நேரம் கடந்த நிலையிலும் அங்கு ஒரு உணவகத்தில் எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.


எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறை அருகில் இருந்தது. ஆனால் அந்த அறைகள் போதிய வசதிகள் இல்லை , தூய்மையாகவும் இல்லை என்பதால் வேறு அருகில் உள்ள விடுதிக்கு சிலர்  

அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றப்பட்டார்கள். 
சோலையார் அணைக்கட்டு
மாலை அனைவரும் சோலையர் அணைக்கட்டை பார்வையிடசென்றோம். பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் …

Palakaddu tour 2013

Image
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மகிழ்ச்சியான அனுபவம், அனுபங்களையும், இயற்கையையும் தேடிய எங்களது பயணம் இந்த முறை கேரளா மாநிலம் பாலக்காடு நோக்கி 15.11.2013 அன்று இரவு பயணமனோம் வழக்கம்போல் அல்லாமல் அனைவருமே குறித்த நேரத்தில் சென்னை சென்ரலில் வந்தடைந்தார்கள்.

16.11.2013 காலை 5.45 மணிக்கெல்லாம் பாலக்காடு இரயில் நிலையம் வந்தடைந்தோம். காலை 8 மணிக்கெல்லாம் அனைவரும் காலை உணவை முடித்துக்கொண்டு நெல்லியம்பதி நோக்கி பயணித்தோம். வழியெங்கும் வயல்வெளிகளும், மலைமுகடுமாய் இயற்கையை ரசித்த வண்ணம் வண்டி மேல்நோக்கி பயணமானது பல கொண்டைஊசி வளைவுகள் உள்ளதால் சிலருக்கு உடல் உபாதைகள் நேரிட்டது.  போகும் வழியில் பூத்தாண்டி அணைக்கட்டைப் பார்வையிட்டோம். அங்கே சிறிய கடையில் சார்பத், மற்றும் சோட சார்பத் வாங்கி குடித்தோம். நெல்லியம்பதி அரசு பண்ணைக்கு மதியம் 12 மணியளவில் சென்றடைந்தோம். பேஸன் பூருட் அனைவரையும் கவர்ந்தது. பூ வகைளையும் அழகிய ஆரஞ்சு தோட்டங்களையும் கண்டு மகிழ்ந்தோம்.

மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டோம். அங்கிருந்து ஜிப்பில் டிரக்கிங் செல்வதற்காக அனைவரும் ஆரவமுடன் சென்றார்கள். எனது மனைவியின் உடல்நிலை ஒத்துழைக்காததா…
Image
கொடைக்கானல் 2013

பயணம் வாழ்க்கை ஓட்டத்தின் களைப்பை போக்கவும், மனஉளைச்சல், சோகங்கள் தீரவும் ஒரு அரிய மருந்து. 

05.04.2013 அன்று இரவு ரயிலில் எங்கள் பயணம் இனிதே துவங்கியது. காலை 6 மணிக்கு கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கினோம். அங்கு தயாராய் இருந்த வண்டியில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

வழிநெடுக மரங்களும் இயற்கையும் எங்களின் மனங்களை குளிர்ச்சியுடன் வரவேற்றது. பல கொண்டைஊசி வளைவுகளும் எங்கள் தலைகளை கிறங்கடித்து மயக்கத்தில் ஆழ்த்தியது.
சுமார் மூன்று மணிநேர பயணத்தின் முடிவில் நாங்கள் தாங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்ட லாட்ஜை சென்றடைந்தோம். அங்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தாங்கினோம்.

காலை உணவருந்த காலை 10.30 மணிக்கு சென்றோம். அங்கு இயங்கும் அனைத்து ஓட்டல்களும் 9 மணிக்கு மேல் தான் இயங்கத் தொடங்குகின்றன. குளிரின் காரணமாக அனைவரும் நேரம்கழித்து தான் ஓட்டல்களுக்கு வருகிறார்கள். சுற்றுலா வந்தவர்கள் தவிர.
எல்லாரும் காலை உணவுக்குபின் கோக்கர்ஸ்வாக் நோக்கி பயணித்தோம். ஒவ்வொரு காட்சிகளும் எங்களின் கண்களுக்குள்ளும், கமிராக்களுக்குள்ளும் பதிவாகத் தொடங்கியது.
நேரம் மதிய உணவு நேரத்தையும் தாண்டி சென்…

கோனே பால்ஸ்சும் நாங்களும்

Image
நான்சங்கர், நாகராஜன், பாலாஜி, கணியன், கலைவாணன்ஆகியோர்கோனேநீர்வீழ்ச்சிக்குசெல்வதுஎனமுடிவெடுத்து 15.10.2012 அன்றுகாலைபயணமனோம். காலை 9 மணியளவில்எங்கள்பயணம்ஆரம்பமானது. கிண்டிவழியாகபோருர்சாலையின்வழியோபெரியபாளையம்செல்லும்வழியில்பயணித்தோம்வழியில்ஒருஇடத்தில்ஓட்டலில்காலை