பயணம்பயணம் செய்வதென்பது எனக்கு பிடித்தமான ஒன்று, ஒவ்வொரு பயணத்தின் போதும் எனக்குள் புத்துணர்ச்சி பிறக்கிறது. மனிதனின் இயந்திர வாழ்க்கை போக்கில் இருந்து ஒரு மாறுதலை அளிக்கவல்லது பயணங்கள் என்று சொன்னால் அது மிகையாகது.

இதுநாள் வரை காணாத இயற்கை அழகை ரசித்தது எங்களது கேரளா பயணத்தில் தான் கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் கேரளா மாநிலம் இயற்கையிலேயே அனைவரையும் கவர்வது அதுவும் நான் அந்த மாநிலத்தில் பிறந்தவன் என்பதால் எனது மாநிலத்தின் அழகை அடுத்தவர் ரசிப்பதை கண்டு ரசிப்பதில் எனக்கு ஒரு தனிமகிழ்ச்சி.

13.08.2008 அன்று எங்களது கேரளா பயணம் தொடங்கியது. இதில் ஜெயச்சந்திரன், ரமேஷ், முருகன், மகேஷ், கணியன், பிரேம், சுசீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ரயிலில் முன்பதிவு செய்து இருந்ததால் பயணம் நன்றாக இருந்தது. கோட்டயத்தில் ஏற்கனவே அறை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால் கவலையின்றி பயணித்தோம்.


காலை கோட்டயம் போய்ச்சேர்ந்தோம். எல்லாரும் குளித்து விட்டு அந்த ஹோட்டலிலேயே காலை உணவை முடித்துக்கொண்டோம். ஆனால் ஒரு வருத்தம் என்னவென்றால் சிலர் சென்னையில் சாப்பிடுவது போன்றே இட்லி, தோசை என்று ஆர்டர் செய்து சாப்பிட்டது தான். நாம் எந்த ஊருக்கு செல்கிறோமே அந்த ஊரின் பிரசித்தி பெற்ற உணவை ருசித்துப்பார்க்கும் சாந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.


அங்கிருந்து ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த வண்டியில் தேக்கடி நோக்கி பயணமனோம். வழி நெடுகிலும் மலைகள், அருவிகள் என கண்களுக்கு விருந்தளித்த வண்ணம் நாங்கள் பயணித்துக்கொண்டு இருந்தோம். 

வழியில் கள்ளுக்கடை தென்பட்டது கள்ளுக்கடையில் சைடிஷ் எப்போதும் அருமையாக இருக்கும் என்பது எனக்கு தெரியும் ஆகையால் கொஞ்சம்  கள்ளும் நிறைய சைடிஷ் மாக உள்ளே தள்ளினோம். கொஞ்சம் போதையுடன் மேற்கொண்டு பயணமானோம்.

மதியம் 2 மணிக்கு தேக்கடி போய்ச்சோர்ந்தோம் சுமார் 1.30 மணி நேர படகு போக்குவரத்து இயற்கை காடுகளை தரிசித்தபடி படகில் நகர்ந்து கொண்டு இருந்தோம். எங்களின் இயற்கை தாகத்தை தணிப்பது போல் அப்போது பெய்த சிறிய மழை குளிர்ச்சியாக இருந்தது.

அன்றைய சுற்றுலாவை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பினோம். மறுநாள் காலை அறையை காலிசெய்து விட்டு குமரகம் படகுத்துறைக்கு பஸ்சில் பயணமனோம். படகுவீட்டீற்கு செல்ல இன்னும் நேரம் இருந்தது. எனவே குமரகம் பறவைகள் சாரணலாயத்தை பார்க்கலாம் என்று உள்ளே போனோம். நாங்கள் போன சமயம் சீசன் இல்லை என்பதால் பறவைகளை தான் பார்க்கமுடியவில்லை.

மதியம் 12.00 மணிக்கு நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த படகு வீட்டிற்கு போனோம். வரவேற்பு பானமாக அனைவருக்கும் இளநீர் வழங்கப்பட்டது. படகு வீட்டில் ஐந்துநட்சத்திர ஓட்டல் அறை போன்று மூன்று அறைகள் இருந்தன. மூன்று பேருக்கு ஒருஅறை என்று ஒதுக்கிக் கொண்டோம்.

அங்கிருந்து படகுவீடு நகரத்தொடங்கியது, மதிய உணவு படகுவீட்டில் தயாராகிக்கொண்டிருந்தது. மதியம் கரிமீன் வறுவலுடன் கேரளா பாரம்பரிய உணவை பரிமாறினார்கள். நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்த வாத்துகறி குழம்பும் பரிமாறப்பட்டது. மதிய உணவை முடித்துக்கொண்டு தூண்டில் மூலம் மீன்பிடிக்கத் தொடங்கினோம்.இரவின் மடியில் நிலவொளியின் வெளிச்சத்தில் படகுவீட்டில் திரையிடப்பட்ட படத்தைப் பார்த்துக்கொண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்தோம்.

காலை விடிந்தது. காலைஉணவை முடித்துக்கொண்டு படகுவீட்டிலிருந்து விடைபெற்றுக்கொண்டு ஆலப்புழை கடற்கரைக்குச் சென்றோம். அங்கே கொஞ்சம் நேரம் கழித்து விட்டு மாலை 4 மணி ரயிலில் சென்னை நோக்கிப் பயணமனோம்.

கடவுளின் சொந்த நாட்டில் வசித்த சிலநாட்கள் இயற்கையின் எழில் கொஞ்சும் இடங்களை பார்க்க முடிந்த இந்த நாட்கள் எங்கள் வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களில் பதியபட்டிருக்கும்.

Comments

  1. This Kumarakom boat house tour was awesome and picturesque. The most enjoyable part is the boat house. A very special thanks to Mr. R. Griesh, who organized an excellent tour

    ReplyDelete

Post a Comment

Popular Posts