காலந்தவறாமை
காலந்தவறாமை (Punctuality)
காலந்தவறாமை ஒரு மனிதனின் குணத்தையும்
அவனது லட்சியத்தையும் முழுமைப்படுத்தும் ஒன்றாகும். ‘Punctual’ என்பதின் அர்த்தம் என்னவெனில் ‘சரியான
நேரம்‘ என்பதாகும்.
ஒவ்வொருக்
கலாச்சாரமும், புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு பட்டமாகவே காலந்தவறாமையை
கருதுகிறது. சிறிய காலதாமத்தை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. வெஸ்டர்ன் காலச்சாரத்தில்
இதை 15 நிமிடம் காலதாமத்தை அனுமதிக்கிறது. ஜப்பானியர்களும் இராணுவமும் இதை அனுமதிப்பதில்லை.
சில தவறுதலான
கணிப்புகள் தான் இதற்கு காரணமாக அமைகின்றன. 9 மணிக்கு
ஒரு கூட்டம் நடக்கிறது என்றால் நாமே அது 10 மணிக்கு
தான் தொடங்கும் என்று கணித்துக்கொள்கிறோம். இந்த கணிப்பு தான் நமது காலந்தவறாமையை குலைக்கும் ஒரு செயல் என்று சொல்லாம்.
காலந்தவறாமை, நேரத்தின்
மதிப்பு
பெரும்பாலான நேரங்களில் குறித்த
நேரத்திற்குள் ஒரு காரியத்தை செய்வது நிலையற்றதாக இருக்கிறது. உதாரணமாக மருத்துவரைப்
பார்ப்பதிலும் அல்லது விமானத்தில் போவதற்கும், மக்கள்
அவர்களுக்குரிய குறிப்பிட்ட நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எங்கு சென்றாலும்
அந்த குறித்த நேரத்திற்குள் வந்தாக வேண்டும் இல்லையெனில் மருத்துவரைப் பார்ப்பதிலோ
அல்லது விமானத்தில் போவதற்கோ மிக காத்திருக்கவேண்டியிருக்கும். இங்கு குறித்த நேரம்
முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் நேரத்தின் மதிப்பு மாறாக இருந்தால் நாம்
குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. மருத்துவரை பார்க்கவும், விமானத்திற்கு
செல்லவும் வேண்டுமாயின் அதிக தொகை கொடுத்து அதனைப் பெறலாம். இது செல்வந்தர்களால் முடியும்.
நேர நிர்வாகம்
நேரநிர்வாகம்
என்பது நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பச் சாதனம் அல்லது திறமையைப் பொறுத்து நம்முடைய
திட்டமே, எண்ணமே நிறைவேறுகிறது. முதலில் நேரம் நிர்வாகம் வர்த்தகத்திற்காகவும், வேலைக்காகவும்
குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் நாளடைவில் அதன் பொருள் விரிவாக பரந்து மனிதனின் அன்றாட
பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
நேர வரையறை
நேர வரையறை
என்ற கருததை முதலில் EP.தாம்ஸன் என்பவர் சமூகவியலியலும், மானிடவியலிலும்
சுட்டிக்காட்டினார். இவரின் கருத்து இன்னும் சமூக அறிவியல் முக்கியமான ஒன்றாக இருந்து
வருகிறது.
நேரத்தின் மதிப்பு
இந்த கட்டுரை நேரத்தின் மதிப்புப்பற்றியது.
நேரத்தின் மதிப்பு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு காணப்படுகிறது. இதனை இரண்டாகப் பிரிக்கலாம்
வேலைசெய்யும் நேரம், வேலைசெய்யா நேரம் என்றும் பிரிக்கலாம். நேரத்தின் அருமையை
உணராதவர்கள் எவரும் சாதிக்க முடியாது. நாம் பணியுரியும் ஒரு நிறுவனத்தில் நல்ல பெயர்
வாங்க வேண்டுமானால் முதலில் நாம் செய்ய வேண்டியது. காலந்தாவறாமையை கடைப்பிடிப்பது தான்.
வேலை செய்வது என்பது எல்லாம் அதற்கு அடுத்தக்கட்டம். எந்த வேலையானாலும் அதை முழுமனதுடன்
செய்ய வேண்டும். சம்பளத்திற்காக வேலை செய்யாமல் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணிபுரிந்தால் நாமும்
முன்னேறுவோம் அந்த நிறுவனமும் முன்னேறும்.
(மொழிமாற்றத்திற்கு உதவியவர் முனைவர் அ.ஜேம்ஸ் அவர்கள்)
(மொழிமாற்றத்திற்கு உதவியவர் முனைவர் அ.ஜேம்ஸ் அவர்கள்)
Comments
Post a Comment