Posts

Showing posts from August 21, 2011

சுற்றுலா 2011

Image
சுற்றுலா 2011 (ஆலப்புழா-கேரளா)

பைந்தமிழ் மனமகிழ்மன்றம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாக அன்டை மாநிலமான கேரளாவுக்கு செல்லலாம் என தீர்மானிக்கப்பட்டு ஆலப்புழா படகு வீட்டிற்கு செல்லலாம் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்பியதால் 19.08.2011 அன்று இரவு 9.15 மணிக்கு ஆலப்புழா விரைவுவண்டிக்கு பயணமனோம். எங்கள் குழுவில் ஜேம்ஸ் சார் மற்றும் குடும்பத்தினர், மகேஷ் மற்றும் குடும்பத்தினர், நான் மற்றும் எனது மனைவி மற்றும் மகன், வடிவழகி மற்றும் குடும்பத்தினர், நாகராஜன் மற்றும் குடும்பத்தினர், மலர் மற்றும் குடும்பத்தினர், சரவணக்குமார், மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
20.08.2011 காலை 5 மணிக்கெல்லாம் ஜேம்ஸ் சார் பல்விளக்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவியையும் அவர் விட்டுவைக்கவில்லை அவரையும் அதிகாலையிலேயே எழுப்பிவிட்டிருந்தார். வெளியிலேயே இப்படி என்றால் வீட்டில் இவர்களுடைய நிலைமையை எண்ணிப்பார்த்தேன். எல்லாரும் காலை உணவை இரயிலிலேயே முடித்துக்கொண்டோம். நான் காலை எழுந்ததும்  கண்ணுக்குகிட்டிய இயற்கை காட்சிகளை எல்லாம் வீடியோவில் பதிய வைத்தேன். எர்ணாகுளம் இரயில் நிலையம் வந…