Posts

Showing posts from August 28, 2011

பைந்தமிழ் மனமகிழ்மன்றம் கடந்து வந்த பாதைகள்

எங்கள் அலுவலகத்தில் கணிப்பொறித்துறையைச் சார்ந்தவர்கள் மட்டும் வருடந்தோறும் சுற்றுலா செல்வது வழக்கம். இதை அறிந்த அலுவலத்தில் உள்ள சிலர் (பெண்கள்) எங்களையும் அழைத்துச் கொண்டு செல்லுங்கள் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது தான் இந்த யோசனை தோன்றியது. ஒரு சிலரை உள்ளடக்கி ஒரு குறிப்பிட்ட தொகையை மாத மாதம் வசூலித்து அதை சுற்றுலா போன்ற செலவுகளுக்காக செலவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. முதலில் இது தஇப பணியாளர் சங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு நான் தலைவராகவும், திரு.சுசீந்திரன் அவர்களை செயலாளர் ஆகவும், திரு.ஜேம்ஸ் அவர்களை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கியது.

மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்பட்டு அதற்கென நான் ஒரு வங்கிக் கணக்கை துவக்கினேன். அந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தொகை வசூலானதும் எங்களது செயல்பாடுகள் தொடங்கியது. திரைப்படம், சிற்றுலா, பரிசுப்பொருள் , சுற்றுலா என ஒவ்வொரு வகையாக மன்றத்தின் செயல்பாடுகள் இன்றளவும் நடந்துக்கொண்டிருக்கிறது.

மன்றம் தொடங்கிய தருணத்தில் அதில் இல்லாதவர்கள் கூறிய ஏளன பேச்சுகள், நகைப்புகள் ஆகியவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது மூன…