Posts

Showing posts from September 26, 2010

பயணம்

Image
பயணம் செய்வதென்பது எனக்கு பிடித்தமான ஒன்று, ஒவ்வொரு பயணத்தின் போதும் எனக்குள் புத்துணர்ச்சி பிறக்கிறது. மனிதனின் இயந்திர வாழ்க்கை போக்கில் இருந்து ஒரு மாறுதலை அளிக்கவல்லது பயணங்கள் என்று சொன்னால் அது மிகையாகது.
இதுநாள் வரை காணாத இயற்கை அழகை ரசித்தது எங்களது கேரளா பயணத்தில் தான் கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் கேரளா மாநிலம் இயற்கையிலேயே அனைவரையும் கவர்வது அதுவும் நான் அந்த மாநிலத்தில் பிறந்தவன் என்பதால் எனது மாநிலத்தின் அழகை அடுத்தவர் ரசிப்பதை கண்டு ரசிப்பதில் எனக்கு ஒரு தனிமகிழ்ச்சி.
13.08.2008 அன்று எங்களது கேரளா பயணம் தொடங்கியது. இதில் ஜெயச்சந்திரன், ரமேஷ், முருகன், மகேஷ், கணியன், பிரேம், சுசீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ரயிலில் முன்பதிவு செய்து இருந்ததால் பயணம் நன்றாக இருந்தது. கோட்டயத்தில் ஏற்கனவே அறை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால் கவலையின்றி பயணித்தோம்.

காலை கோட்டயம் போய்ச்சேர்ந்தோம். எல்லாரும் குளித்து விட்டு அந்த ஹோட்டலிலேயே காலை உணவை முடித்துக்கொண்டோம். ஆனால் ஒரு வருத்தம் என்னவென்றால் சிலர் சென்னையில் சாப்பிடுவது போன்றே இட்லி, தோசை என்று ஆர்டர் செய்து சாப்பிட்டது த…