Posts

Showing posts from November 14, 2010

காலந்தவறாமை

Image
காலந்தவறாமை (Punctuality)
    காலந்தவறாமை ஒரு மனிதனின் குணத்தையும் அவனது லட்சியத்தையும் முழுமைப்படுத்தும் ஒன்றாகும். ‘Punctual’ என்பதின் அர்த்தம் என்னவெனில் சரியான நேரம்என்பதாகும்.
ஒவ்வொருக் கலாச்சாரமும், புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு பட்டமாகவே காலந்தவறாமையை கருதுகிறது. சிறிய காலதாமத்தை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. வெஸ்டர்ன் காலச்சாரத்தில் இதை 15 நிமிடம் காலதாமத்தை அனுமதிக்கிறது. ஜப்பானியர்களும் இராணுவமும் இதை அனுமதிப்பதில்லை.
சில தவறுதலான கணிப்புகள் தான் இதற்கு காரணமாக அமைகின்றன. 9 மணிக்கு ஒரு கூட்டம் நடக்கிறது என்றால் நாமே அது 10 மணிக்கு தான் தொடங்கும் என்று கணித்துக்கொள்கிறோம். இந்த கணிப்பு தான் நமது காலந்தவறாமையை குலைக்கும் ஒரு செயல் என்று சொல்லாம்.
காலந்தவறாமை, நேரத்தின் மதிப்பு
பெரும்பாலான நேரங்களில் குறித்த நேரத்திற்குள் ஒரு காரியத்தை செய்வது நிலையற்றதாக இருக்கிறது. உதாரணமாக மருத்துவரைப் பார்ப்பதிலும் அல்லது விமானத்தில் போவதற்கும், மக்கள் அவர்களுக்குரிய குறிப்பிட்ட நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எங்கு சென்றாலும் அந்த குறித்த நேரத்திற்குள் வந்தாக வேண்டும் இல்லையெனில் …