Posts

Showing posts from February 5, 2012

சிற்றுலா - வேலூர் மாவட்டம்

Image
இந்த வருட சிற்றுலா கோனே பால்ஸ் செல்வது என்று தீர்மானித்து, நிதிபற்றக்குறையாலும் உறுப்பினர்களின் வருகை குறைவலும் பின்பு திட்டமும் நாளும் மாற்றப்பட்டு. 04.02.2012 அன்று வேலூர்  செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

04.02.2012 அன்று காலை எட்டுமணிக்கெல்லாம் மலர்விழி, பாலாஜி, கணியன் மற்றும் எனது குடும்பத்தாருடன் வேளச்சேரியிலிருந்து வண்டி புறப்பட்டது. தண்ணீர் பாட்டில் வாங்கும் பணியை பாலாஜியிடம் கொடுத்திருந்தேன் அவர் அந்த வேலையை பாலாஜி சரியாக செய்தார்.

போகும் வழியில் தில்லைகங்கா நகரில் நாகராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து கொண்டார். பின்பு பட்ரோடு சந்திப்பில் மகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் குடும்பத்துடன் ஏறிக்கொண்டனர். எங்கள் பயணம் தொடங்கியது.

சிலர் காலைஉணவு அருந்த நேரம் கிடைக்காததால் ஸ்ரீபெரும்பத்தூர் அருகில் ஒரு ஓட்டலில் நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். இனி வரும் காலங்களில் காலை சீக்கிரமாக கிளம்புவது என்றால் காலை உணவை ஏற்பாடு செய்து விட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

மீண்டும் வண்டி புறப்பட்டது நேராக இரத்னகிரி முருகன் கோயிலுக்கு செல்வது என்று தீர்மானித்து பயணமனோம். ஓட்டுநர் தான் பொறும…