Posts

Showing posts from October 10, 2010

சுற்றலா தலங்கள் (கேரளா) 5

Image
கோட்டயம்
கேரளா மாநிலத்தின் மலைநிறைந்த நகரங்களில் இது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இயற்கைக்காட்சிகளை ரசிக்க சிறந்த இடங்கள் இங்கு ஏராளம். ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நகரம். தேனிமாவட்டத்திலிருந்து வெகு அருகாமையில் உள்ளது இந்த நகரம்.
குமரகம்
தென்னைமரங்களும் மங்கோரோவ் காடுகளும் நிறைந்த பகுதியாகும். இது வேம்பநாடு ஏரியின் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் படகுவீடுகள் இயற்கை அழகை ரசிக்க இயக்கப்படுகின்றன. மற்றும் ஆயுர்வேத சிகிச்சை, யோகா, படகுசாவரி, மீன்பிடித்தல், நீச்சல் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உண்டு.
குமரகம் பறவைகள் சரணாலயம்
இது இயற்கையாக வேம்பநாடு ஏரியின் அருகில் அமைந்துள்ளது. இங்கு சீசன் நேரங்களில் வெளிநாடுகளிலிருந்து பல பறவைகள் வந்து தங்கிச்செல்கின்றன. சிறிய காடுபோன்ற தோற்றத்தில் அமைந்துள்ள சரணாலயம் மிகவும் அழகாக தோற்றமளிக்கிறது.
வெம்பநாடு ஏரி
கோட்டயத்தின் அழகை மேருகூட்டுவது இந்த ஏரியாகும். இதில் மிதக்கும் படகு வீடுகள் கண்பவர் மனதைக் கொள்ளைக்கொள்ளும். இது சிறந்த ஒரு பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது.
அய்யப்பரா
பாண்டவர்கள் வானவசத்தின் போது வந்து தங்கிச் சென்றதாக கருதப்பட…

சுற்றலா தலங்கள் (கேரளா) 4

Image
ஆலப்புழை
கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. மிகப்பெரிய பேக்வாட்டர்களை கொண்டது. இங்கு இருக்கும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற ஊர். கயிறுகளால் உண்டாக்கப்படும் பொருட்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றும் செம்மீன் (எரா) இங்கு வளர்க்கப்பட்டு பலஇடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரான்முளா படகு போட்டி இங்கு வருடந்தோறும் நடத்தப்படுகிறது. நெற்களஞ்சியம் என போற்றப்படும் குட்டநாடு இங்கு தான் உள்ளது. கேரளாவின் கிராமத்தின் அழகை ரசிக்க சிறந்த இடமாக இது விளங்குகிறது.
பேக்வாட்டர்கள்
ஆலப்புழையின் அழகை ரசிக்க சிறந்த இடம் பேக்வாட்டர்ஸ் ஆகும் இதன் கரைகளில் அமைந்துள்ள, கோயில்கள், தேவலாயங்கள் மற்றும் தொழில்கூடங்கள் ஆகியவற்றை ரசித்தபடி பயணம் செய்வது இனிமையாக இருக்கும். இது ஆலப்புழையில் தொடங்கி ஜெட்டி எனப்படும் இடம் வரை பரந்துள்ளது.
படகுபோட்டி
ஆலப்புழையின் அழகை மேருகூட்டுவது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டியாகும். நேருகோப்பை படகுப்போட்டிகள் இங்கு புகழ்ப்பெற்றது. இது புன்னமட நதியின் மேல் நடத்தப்படுகிறது. இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதை காண வெளிநாட்டுப் பயணிகள் அதிக …