கொடைக்கானல் 2013

பயணம் வாழ்க்கை ஓட்டத்தின் களைப்பை போக்கவும், மனஉளைச்சல், சோகங்கள் தீரவும் ஒரு அரிய மருந்து. 


05.04.2013 அன்று இரவு ரயிலில் எங்கள் பயணம் இனிதே துவங்கியது. காலை 6 மணிக்கு கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கினோம். அங்கு தயாராய் இருந்த வண்டியில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

வழிநெடுக மரங்களும் இயற்கையும் எங்களின் மனங்களை குளிர்ச்சியுடன் வரவேற்றது. பல கொண்டைஊசி வளைவுகளும் எங்கள் தலைகளை கிறங்கடித்து மயக்கத்தில் ஆழ்த்தியது.
சுமார் மூன்று மணிநேர பயணத்தின் முடிவில் நாங்கள் தாங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்ட லாட்ஜை சென்றடைந்தோம். அங்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தாங்கினோம்.

காலை உணவருந்த காலை 10.30 மணிக்கு சென்றோம். அங்கு இயங்கும் அனைத்து ஓட்டல்களும் 9 மணிக்கு மேல் தான் இயங்கத் தொடங்குகின்றன. குளிரின் காரணமாக அனைவரும் நேரம்கழித்து தான் ஓட்டல்களுக்கு வருகிறார்கள். சுற்றுலா வந்தவர்கள் தவிர.
எல்லாரும் காலை உணவுக்குபின் கோக்கர்ஸ்வாக் நோக்கி பயணித்தோம். ஒவ்வொரு காட்சிகளும் எங்களின் கண்களுக்குள்ளும், கமிராக்களுக்குள்ளும் பதிவாகத் தொடங்கியது.
நேரம் மதிய உணவு நேரத்தையும் தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. அனைவருக்கும் பசிக்க தொடங்கியது. நாங்கள் தங்கியிருந்த அறையின் அருகில் உள்ள ஓட்டல்களில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். மாலை கொஞ்ச நேரம் வெளியில் நடந்தோம். இரவு கிரிக்கெட் பார்த்தோம்.

07.04.2013

இன்று காலை ஒன்பது மணிக்கெல்லாம் அனைவரும் தயாராய் இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருந்தேன். எல்லாரும் நேரம் கழித்துதான் கிளம்புவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியமாக அனைவருமே கிளம்பிவிட்டார்கள். காலை கோவிலுக்கு சென்றோம். அங்கிருந்து ஒரு பூங்காவிற்கு சென்றோம் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். 

இதை முடித்து கொடைக்கானல் ஏரிக்கு சென்றோம். அங்கே படகு சாவாரி செய்தோம். அங்கே நிறைய பேர் குதிரை சாவாரி, சைக்கிள் சாவாரி செய்து கொண்டிருந்தார்கள். அருகில் உள்ள கடைகளில் நிறைய இனிப்புகள் வாங்கி கொண்டோம். மதியம் அருகில் உள்ள ஓட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். பின்பு கீழ்நோக்கி இறங்க தொடங்கினோம். வழியில் சில்வர் நீர்வீழ்ச்சியை கண்டு களித்தோம். பின்பு வரும் வழியில் வத்தலக்குண்டு பகுதி மலையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.

இந்தச் சுற்றுலாவில் சில நிறைகள் மற்றும் குறைகள்

கொடைக்கானலில் உள்ள இரண்டு இடங்களை தவிர மற்ற இடங்கள் அனைத்தையும் பார்த்தோம்.

மகேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொறிப்பதற்கு என்று நிறைய வாங்கி வந்திருந்தார்கள். நானும் அடுத்த முறை முயற்சிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். மற்றவர்களும் இதைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அக்க்ஷிதா பொறுமையாக இருந்தாள். அதிகம் பேச வில்லை, குறிப்பாக பாட்டுபாடி கொல்லவில்லை( சும்மா)
சங்கர் இவரது ஒவ்வொரு சேட்டைகளும் எங்கள் அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்காக அமைந்தது. சுசீந்திரன் இல்லாத குறையை தீர்த்து வைத்தார் (புகைப்படம் எடுப்பதில் மட்டும்)
என்னால் என்மகனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடைசிநேரத்தில் குடும்பத்துடன் பங்கேற்கமுடியவில்லை. அது கடைசி வரை எனக்கு ஒரு குறையாகவே இருந்தது.

மலர்விழி - விழிகள் மட்டுமே இருந்தது மலரில் வாசமில்லை. வரும் சுற்றலாக்களில் மணம் பரப்புவார் என நம்புகிறேன்.

நாகராஜ் இருப்பதால் கலகலப்புக்கு பஞ்சமில்லை. அவர் சுற்றுலாவில் அலுவலக விஷயங்களை விட்டு சொந்த விஷயங்களை பேசினால் இன்னும் நன்றாக இருக்கும். ஏன் என்றால் அலுவலகம், நகரம் போன்ற அனைத்தையும் அந்த நாட்களில் மறந்து மகிழ்ச்சியுறலாம்.
கெமி  மற்றும் குடும்பத்தினர் இயற்கையை ரசிப்பதிலும், பேசுவதிலும் காட்டும் ஆர்வத்தைவிட கடைகளில் பொருட்களை வாங்குவதிலும், சாப்பிடுவதிலும் மட்டுமே அதிக கவனம் காட்டினார்கள்.

பாலாஜி மற்றும் சிறுவன் இருவருமே அடக்கி வாசித்தார்கள். பாலாஜிக்கு பார்த்த பெண் பிடித்ததோ என்னமோ. துணி செலவாவது அவருக்கு மிச்சப்பட்டிருக்கும். அந்த பெண் மணவறையில் எந்த ஆடையில் வந்து உட்காருவாள் என்று எண்ணிய போது சிரிப்பு தான் வந்தது.

மணிகண்டன் - இவர் இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் உள்ளார். அடுத்த சுற்றலாவில் ஆவது அதைமாற்றிக்கொள்வர் என நம்புகிறேன்.
கணியன் மற்றும் அம்மா - இருவருக்குமே உடல்நிலை ஒத்துழைக்கவில்லை, அதனால் தானே என்னமே சில இடங்களில் வண்டியில் இருந்து இறங்கவில்லை. (செலவாகும் என்று நினைத்தார்களோ என்னமோ) கணியன் அம்மா அவர்கள் சிறு நொட்டுபுத்தகம் வைத்து ஆகும் செலவுகளை எழுதி வைத்துக்கொண்டிருந்தார். அனைவரும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். கணியனை எவ்விதம் வளர்த்துள்ளார் என்பதற்கு இது சான்று என்று நினைத்துக்கொண்டேன்.

சரவணகுமார் எப்போதும் போல் அதிக அர்பாட்டம் இல்லாமல் இருந்தார். அது அவரது இயல்பு என்பது பழகியவர்களுக்கு தெரியும்.
அனைவரையும் கவர்ந்தது என்றால் அது கெமியின் அக்கா மகளின் சுட்டிதனமான பேச்சு மட்டுமே. நானும் மிகவும் ரசித்தேன்.

இந்த சுற்றுலாவில் மன்ற உறுப்பினர்கள் குறைவு என்றாலும் வந்தவர்கள் நிறைவாக செயல்பட்டார்கள். இனிவரும் நிகழ்வுகளில் அனைத்து உறுப்பினர்களும் வந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக சுற்றுலாவை திட்டமிட முடியும். அதற்கு அனைவரும் வீண்வாதங்களை மறந்து ஒத்துழைக்க வேண்டும்.





Comments

Popular Posts