ஏலகிரி  சிற்றுலா

13.05.2012 அன்று காலை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து நான் மற்றும் மலர்விழி அவர்களும் வண்டியில் புறப்பட்டோம் போகும் வழியில் மற்ற அனைவரும் ஏறிக்கொண்டனர்.  போகும் போது ஒரு கல் ஒருகண்ணாடி படம் பார்த்தோம்.


மகேஷ் வழக்கம்போல் போட்டோ எடுக்கும்பணியை தொடங்கினார். பாஸ்கர் எப்போதும் போல் தூங்குவதற்கு ஏற்ற ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து ஐக்கியமானார். அக்ஸிதாவின் பாட்டை கேட்க கடைசிவரை போராடிபார்த்தும் பயனில்லாமல் போனது. மகேஷ் அவரது அம்மாவை அழைத்து வந்தது நாமும் இனி அம்மாவை அழைத்து வந்தால் நன்றாக இருக்குமோ என்று எண்ண தோன்றியது. அன்னையர் தினத்திற்கு மரியாதைக்கொடுத்து ஒருவேளை அம்மாவை மகேஷ் அழைத்து வந்திருப்பரோ என்றும் தோன்றியது.

போகும்வழியில் காஞ்சிபுரம் அருகே ஒரு ஓட்டலில் நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். அங்கிருந்து மேலும் ஒரு மூன்றுமணிநேரப் பயணத்திற்கு பிறகு ஏலகிரி மலை எங்களை வரவேற்றது. மலை ஏறத்தொடங்கியதுமே ஏசியை நிறுத்திவிட்டதால் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சிலருக்கு வாந்தி வருவதாக கூறினார்கள் கடைசி வரை யாரும் வாந்தி எடுக்கவில்லை.


ஏலகிரி வந்து சேர்ந்ததும் பூங்கா மற்றும் படகு சாவரி இருக்கும் இடத்திற்கு சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. மதிய உணவை முடித்த பிறகு படகுசாவரி செய்யலாம் என்று சாப்பிட தொடங்கினோம். பூங்கா நிறைய எறும்புகளாக இருந்தது சிலர் நின்றுகொண்டேதான் சாப்பிட்டோம். வெளியில் பாதுகாவலரிடம் கேட்டபோது தான் சொன்னார் அந்த எறும்புகள் கடிக்காது என்று.
சாப்பிட்டு விட்டு படகு சாவரி சென்றோம். சுசீந்திரன், மகேஷ் அம்மா, பாலாஜி, பாஸ்கர், மலர், சங்கர், சங்கர் மனைவி, ஆகியோர் ஒரு படகிலும்,  பாவம் அந்த படகு ஒட்டுபவர் இத்தனை மலைகளை வைத்து எப்படி துடுப்பு போட்டார் என்பதை தூரத்தில் இருந்து ரசித்தோம். நான் மகேஷ், மகேஷ் மனைவி,  நாகராஜ், நாகராஜ் மனைவி மற்றும் தங்கை ஆகியோர் ஒரு படகிலும் ஏறிக்கொண்டோம். படகு சாவரி முடித்து அனைவரும் Nutural Park சென்றோம். அங்கே கொஞ்சநேரம் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வரும் வழியில் பாலாப்பழம் விற்றார்கள் சிலர் வாங்கிக்கொண்டனர்.

ஏலகிரி என்பது ஒரு பெரிய சுற்றுலா தலமாக தோன்றவில்லை. கொண்டைஊசி வளைவுகளும், ஒரு சிறு பூங்காங்களும், படகுசாவரியும் தான் உள்ளது. பூங்காவை கொஞ்சம் பராமரித்தல் நன்றாக இருக்கும். எங்கள் சிற்றுலாவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினோம். அடுத்த முறை கொஞ்சம் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தோன்றியது. சிலர் சிற்றுலாவிற்கு பணம் கொடுத்துவிட்டால் போதும் எல்லா செலவுகளையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பை மாற்றி தனிப்பட்ட முறையில் செலவு செய்ய ஆர்வம் காட்ட வேண்டும்.

குறிப்பு: இந்த சிற்றுலா பற்றி சில வரிகளில்

சிற்றுலா நேரம் பயணத்திலேயே பாதி கழிந்தது என்று கூறலாம்,

(சன்டிவி டாப் 10 மாதிரி ஏலகிரி டாப் 8 )

சங்கர் அண்ட் பேமிலி உற்சாகம் கொஞ்சம் குறைவு

நாகராஜ் அண்ட் பேமிலி - டம் அண்ட் ஜெர்ரி

பாஸ்கர் - கும்பகர்ணன்

மகேஷ் - வீட்டுல எலி வெளியில புலி

பாலாஜி - சிக்கிட்டான்டா ஒரு அடிமை

மலர்விழி - வாசமில்லை

சுசீந்திரன் - ஸ்டில் சிகாமணி

கிரிஷ் - ரொம்ப நல்லவனா இருக்கான்டா

சுற்றுலாக்களும், சிற்றுலாக்களும் நமது அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்திலிருந்து நமது மனங்களை உற்சாகமூட்டவும், ரசிக்கவும், ரசிக்க கத்துக்கொடுக்கவும், ஒரு வாய்ப்பாக அமைகிறது. இனி வரும் நிகழ்வுகளில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டால் மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகும் என்பதில் ஐயமில்லை,

ரா.கிரிஷ்




Comments

  1. சில தகவல்கள் சேர்க்கலாம் என்பது என் கருத்து.

    கிரிஷ் அவரிகளின் மனைவி மற்றும் மகன் வராததது கிரிஷ் அவர்களின் உற்சாகத்திற்கு தடையாக இருந்தது என்று கூறலாம். திரு. கிரிஷ் ஒரு நடத்துனர் போன்று உற்சாகமும், ஆர்வமும் இல்லாமல் இருந்தார்.

    கணியன் அவர்கள் வராதாதல் திரு. சுசி அவர்கள் மட்டும் மின்னஞ்சலில் வருத்தம் தெரிவித்தார், ஆனால் செயலில் அப்படி ஒன்றும் அவர் காட்டவில்லை.

    மலர்விழி அவர்கள் எப்பொழுதும் இருக்கையை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறார்.

    மழலைகளின் உற்சாகம் இந்த முறை சற்று அதிகமாக காணப்பட்டது.

    பாலாஜி அவர்கள் பாஸ்கர் சார் போல் சற்று தூங்க ஆரம்பித்துவிட்டார். மகேஷ் அவர்கள் படம் எடுப்பதிலும், பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம் காட்டினார்.

    இயற்கை பூங்காவில் நாம் பார்க்க நிறைய இடங்கள் இருந்தன. நேரமின்மை தடையாக அமைந்தது.

    வேணி அவர்களின் உற்சாகமின்மை,

    நாகராஜ்

    ReplyDelete

Post a Comment

Popular Posts