சிற்றுலா - வேலூர் மாவட்டம்


இந்த வருட சிற்றுலா கோனே பால்ஸ் செல்வது என்று தீர்மானித்து, நிதிபற்றக்குறையாலும் உறுப்பினர்களின் வருகை குறைவலும் பின்பு திட்டமும் நாளும் மாற்றப்பட்டு. 04.02.2012 அன்று வேலூர்  செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

04.02.2012 அன்று காலை எட்டுமணிக்கெல்லாம் மலர்விழி, பாலாஜி, கணியன் மற்றும் எனது குடும்பத்தாருடன் வேளச்சேரியிலிருந்து வண்டி புறப்பட்டது. தண்ணீர் பாட்டில் வாங்கும் பணியை பாலாஜியிடம் கொடுத்திருந்தேன் அவர் அந்த வேலையை பாலாஜி சரியாக செய்தார்.

போகும் வழியில் தில்லைகங்கா நகரில் நாகராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து கொண்டார். பின்பு பட்ரோடு சந்திப்பில் மகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் குடும்பத்துடன் ஏறிக்கொண்டனர். எங்கள் பயணம் தொடங்கியது.

சிலர் காலைஉணவு அருந்த நேரம் கிடைக்காததால் ஸ்ரீபெரும்பத்தூர் அருகில் ஒரு ஓட்டலில் நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். இனி வரும் காலங்களில் காலை சீக்கிரமாக கிளம்புவது என்றால் காலை உணவை ஏற்பாடு செய்து விட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

மீண்டும் வண்டி புறப்பட்டது நேராக இரத்னகிரி முருகன் கோயிலுக்கு செல்வது என்று தீர்மானித்து பயணமனோம். ஓட்டுநர் தான் பொறுமையை சோதித்தார். வண்டி 60 கிலோமீட்டர் வேகத்தில் தான் போனது. இரத்னகிரியை காலை 10அடைந்தோம். சிலர் அந்த படிக்கட்டில் ஏறுவதற்கே சிரமப்பட்டது தெரிந்தது. நாங்கள் போன நேரம் முருகனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவழியாக கோயிலை வலம் வந்து அங்கிருந்து கிளம்பினோம்.

அங்கிருந்து நேராக கோல்டன் டெம்பிள் செல்வது என்று தீர்மானித்து பயணித்தோம். மதியம் 12 மணிக்கு சென்றடைந்தோம். உள்ளே கேமிரா, போன் போன்றவைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றதும் ஒரு அறையில் அனைவரையும் அமர வைத்து பூட்டிவிட்டு சென்றனர் அந்த அறைக்குள் தின்பண்டங்கள் போன்றவைகளை விற்பனை செய்தார்கள். அதிகம் தெலுங்கர்களையும், இந்திகாரர்களையும் காணமுடிந்தது. விற்பனை ஆகவேண்டும் என்ற நோக்கில் கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் இது போன்ற அறையில் அடைத்து வைப்பது. கோயில்கள் கூட வியாபரநோக்கில் செயல்பட தொடங்கிவிட்டன என்பதை வெளிப்படையாக கட்டுவதாக இருந்தது.கோல்டன் டெம்பிள் பெயருக்கு ஏற்றாப்போல் தங்கத்தில் அருமையான வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது. அங்கு விழும் தண்ணீர்ருக்குள் ரூபாய் நோட்டுகளையும், சில்லரைகளையும் வாரிஇறைத்திருந்தார்கள். அதன் பக்கத்தில் ஒரு  அறிவிப்பு பலகை வேறு யாரும் இத்தகைய செயலில் ஈடுபாடதீர்கள் என்று. நமது மக்கள் எங்கு இதுபோன்ற அறிவிப்பு பலகை உள்ளதோ அங்கு தான் அதற்கு நேர்மறாக செயல்படுவார்கள் என்பதை உகித்து தான் அந்த பலகை வைத்தார்களோ என்னமோ.

ஒருவழியாக வெளியில் வந்தோம், கோயிலின் வாயில் அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டு இருந்தது. உள்ளே நுழையபோனோம். ஏற்கனவே மதிய உணவை வெளியே அசைவ சாப்பாடு சாப்பிடலாம் என்று தீர்மானித்திருந்ததால் அதை புறக்கணித்துவிட்டு வெளியில் வந்தோம்.

அங்கிருந்து நேராக நல்ல ஒரு ஓட்டலில் நிறுத்தி சாப்பிடலாம் என்று சுற்றித்திருந்தோம். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு நல்ல அசைவ ஓட்டல் தென்படவில்லை. ஒருவழியாக சங்கர் விசாரித்ததில் பேருந்து நிறுத்தத்தில் அருகில் உள்ள அம்மா ஒட்டலில் அசைவச் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள் அங்கிருந்து வாங்கிக்கொண்டோம்.


நேராக வேலூர் கோட்டையில் வண்டியை சிலர் மரநிழலில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார்கள். சிலர் வண்டியிலேயே சாப்பிட்டார்கள். மதிய உணவுக்குப்பின் கோட்டையை சுற்றிப்பார்க்க தொடங்கினோம். பின்பு கோட்டையில் அகழியில் படகு சாவாரி செய்தோம். நேரம் கிடைத்தால் ராஜீகாந்தி நினைவிடம் பார்க்கலாம் என்றிருந்தோம். ஆனால் குறித்த நேரத்தில் செல்ல முடியாத காரணத்தால் அந்த இடம் மட்டும் பார்க்கமுடியவில்லை.

இந்த சிற்றுலாவில் மன்றத்தின் உறுப்பினர்களின் செயல்பாடு நன்றாக இருந்தது எனலாம். புதிய வரவுகள் சொதப்புவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அதிக ஆர்வமுடனும், நகைச்சுவையுடன்  பேசிக்கொண்டு வந்தார்கள். நாகராஜ் தன்னை அழகாக படம்எடுக்கும்படி அடிக்கடி கூறிக்கொண்டு இருந்தார். இனி அவர் அழகாகும் வரை அவரை புகைப்படம் எடுப்பதில்லை என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாம். நாகராஜ் மனைவி கொஞ்சம் பேசுவதில் தேறிஇருக்கிறார். சங்கர் மற்றும் வேணியை பற்றி சொல்லவேண்டும் என்றார் நிறைய சொல்லலாம். இதுபோல் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும், ஏற்றதாழ்வுகள் பராமல் எந்தவித பந்தாவும் இல்லாமல் இயங்கும் இதுபோன்ற மன்ற உறுப்பினர்களைதான் எதிர்பார்த்தேன்.

எந்த திட்டமிடல் என்றாலும் நேரம் மிகவும் முக்கியம் இந்தமுறை அனைவரும் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்ததை இனியும் தொடர்ந்தால் இனிவரும் பயணங்கள் முழுமையாகும். மலர் இயல்பாக இல்லையோ என்று பட்டது ஒரு வேளை அவருக்கு நெருக்கமான நண்பிகள் வரவில்லை என்ற காரணமோ என்னமோ.மகேஷ் மற்றும் அவரது மனைவி எப்போதும் போலவே இயல்பாக இருந்தனர். அக்ஸிதா கொலைவெறி பாடல் மட்டும் பாடியது நன்றாக இருந்தது. (நல்ல வேளை ரைம்ஸ் பாடிக் கொல்லவில்லை(சும்மா). மகேஷ் மனைவியை விரதத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள சொல்லவேண்டும் என்று தோன்றியது எப்போது வெளியில் வந்தாலும் விரதம் என்று சொல்லிவிடுகிறார். கணியன் இயல்பாக இருப்பதுபோல் அடிக்கடிக் காட்டிக்கொண்டார். வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும் பின்பக்கம் வரவேயில்லை என்ன காரணமோ அதை அவர்தான் சொல்ல வேண்டும்.

என் மனைவிக்கு சிற்றுலாவிற்கு முந்தைய நாள் உடல்நலமில்லாமல் போனது, அனிஷ்க்கும் உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்து ஆகையால் மனைவியை வற்புறுத்திதான் அழைத்துவர வேண்டியிருந்தது. ஆகையால் என்னாலும் இயல்பாக இருக்க முடியவில்லை. மேலும் பலரும் வரராததால் எவ்வளவு நேரம் பேசியதையே பேசுவது என்று விட்டுவிட்டோம்.

பல உறுப்பினர்கள் வரவில்லை என்றாலும் இந்த சிற்றுலாவும் எந்தவித கருத்துவேறுபாடுகளும் இல்லாமல் நல்லமுறையில் நடந்தது.

Comments

Popular Posts