சாதித்தப் பெண்மணி


ஏசியாநெட் தொலைக்காட்சியில் நடத்தப்படும் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற ரியாலிட்டி இசை நிகழ்ச்சியில் சாதித்துக் காட்டியுள்ளார் ஒரு தமிழ்பெண்மணி. அவர் பெயர் கல்பனா திருமணமாகி ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து வாழும் பெண்மணி. ஒருவருட நீண்ட இசைப்பயணத்திற்கு பின் 1 கோடி ரூபாய் விலையுள்ள ஒரு வீட்டைத் தன் இசையால் பரிசாக பெற்றிருக்கிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இவரது மாறுபட்ட செயல்முறைகளால் நடுவர்களிடம் பாராட்டுப்பெற்று இறுதிச்சுற்று வரை கலங்காமல் நின்று சாதித்துக்காட்டியுள்ளார்.

இவரது வெற்றிக்குக் காரணம் விடாமுயற்சியும், கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் என்பதை இவரது நிகழ்ச்சிகளைக் கண்டால் அனைவருக்கும் புனலாகும். இவரைப் பாராட்டிப் பேசிய பாடகர் ஜேசுதாஸ் அவர்கள் இதை நினைவுக்கூர்ந்தார்.

ஒவ்வொரு பெண்மணியும் இவரது சாதனையைப் பார்த்தாவது, வெட்டி பந்தாவும், புதிய நாகரிக தாக்கமும், வெட்டி பேச்சையும் விட்டு அவரவர் செய்யும் வேலையில் முழுமனதுடனும், தன்னம்பிக்கையுடனும், உண்மையாகவும் உழைத்தால் கல்பனாவைப் போல் பல சாதனைப் பெண்களை பல துறைகளிலும் இனியும் காணமுடியும்.

இவரது நிகழ்ச்சிகளைக் காண கீழ்க்கண்ட இணைப்புக்கு செல்லவும்.
http://www.youtube.com/results?search_query=idea+star+singer+kalpana&aq=f

Comments

Popular Posts