அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர்...

  

அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர் வீரர்களிடம் சொன்னார்,''எனக்கு நீங்கள் நான் கேட்கப் போகும் உதவிகளைச் செய்ய வேண்டும்.நான் இறந்த பின் என்னைச் சவப் பெட்டியில் தூக்கிச் செல்லும் பொது என் இரு கைகளையும் வெளியே தொங்கப் போட்டவாறு எடுத்துச் செல்ல வேண்டும்.எனக்கு மருத்துவம் பார்த்த உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் சவ ஊர்வலத்தின் முன்னே செல்ல வேண்டும்.நான் சேகரித்த வைரங்களையும் வைடூரியங்களையும் ஊர்வலப் பாதையில் போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.'' அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார்,''நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும்,இறந்தபின் நான் வெறுங் கையுடன் தான் போகிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள என் கைகளை வெளியே தொங்க விட வேண்டும்.மிகச்சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும் சாவை வெல்ல முடியாது என்பதை உணர்த்த மருத்துவர்கள் சவ ஊர்வலத்தில் செல்ல வேண்டும்.வைரங்களும் வைடூரியங்களும் இறந்த பின் மதிப்பில்லாதவை என்பதை அறிவிக்கத்தான் அவற்றை ஊர்வலத்தில் வீசச் சொன்னேன்.''

Comments

Popular Posts