வித்யா-ஆரம்பம்குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் அதாவது இரண்டு வயத்திற்க்கு மேற்பட்ட குழந்தைகளை வருடந்தோறும் விஜயதசமி அன்று சில கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்குக்கொள்ள செய்வது வழக்கமாக உள்ளது.


இந்த நிகழ்ச்சி தற்போது பல கோயில்களில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நங்கநல்லூரில் உள்ள குருவாயூரப்பன் கோயில் இதற்காக விஜயதசமிக்கு முன் முன்பதிவு செய்யப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதும் விஜயதசமி அன்று எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டுக்கொடுப்பார்கள். அதன் படி சென்றால் குழந்தைகளுக்கு ஒரு சிலேட் (பலகை) மற்றும் எழுதுகோல், ஒரு நோட்புக் ஆகியவைகளை க் கொடுப்பார்கள். உள்ளே சென்றவுடன் பூஜைசெய்பவர் அமர்ந்திருப்பார். அவர் முன்னால் வரிசையாக அமரவேண்டும். குழந்தைகளை அப்பா மடியிலோ அல்லது தாத்தா மடியிலோ அமர வைக்கலாம். பின்பு பூஜை செய்பவர் சொல்லித்தரும்படி மாத்திரங்களை உச்சரித்து குழந்தையின் கையைப் பிடித்து அரிசி அல்லது நெல்லில் எழுத வைப்பார்கள் இந்த நிகழ்ச்சிதான் வித்யாரம்பம் எனப்படுகிறது.

ஆலயத்தின் முகவரி

Sri Guruvayurappan Asthika Samajam
Plot No.21, II Main Road, Ram Nagar,
Nanganallur, Chennai 600 061.
Ph:22672283


Comments

Popular Posts