பைந்தமிழ் மனமகிழ்மன்றம் கடந்து வந்த பாதைகள்


எங்கள் அலுவலகத்தில் கணிப்பொறித்துறையைச் சார்ந்தவர்கள் மட்டும் வருடந்தோறும் சுற்றுலா செல்வது வழக்கம். இதை அறிந்த அலுவலத்தில் உள்ள சிலர் (பெண்கள்) எங்களையும் அழைத்துச் கொண்டு செல்லுங்கள் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது தான் இந்த யோசனை தோன்றியது. ஒரு சிலரை உள்ளடக்கி ஒரு குறிப்பிட்ட தொகையை மாத மாதம் வசூலித்து அதை சுற்றுலா போன்ற செலவுகளுக்காக செலவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. முதலில் இது தஇப பணியாளர் சங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு நான் தலைவராகவும், திரு.சுசீந்திரன் அவர்களை செயலாளர் ஆகவும், திரு.ஜேம்ஸ் அவர்களை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கியது.

மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்பட்டு அதற்கென நான் ஒரு வங்கிக் கணக்கை துவக்கினேன். அந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தொகை வசூலானதும் எங்களது செயல்பாடுகள் தொடங்கியது. திரைப்படம், சிற்றுலா, பரிசுப்பொருள் , சுற்றுலா என ஒவ்வொரு வகையாக மன்றத்தின் செயல்பாடுகள் இன்றளவும் நடந்துக்கொண்டிருக்கிறது.

மன்றம் தொடங்கிய தருணத்தில் அதில் இல்லாதவர்கள் கூறிய ஏளன பேச்சுகள், நகைப்புகள் ஆகியவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது மூன்றாவது வருடத்தை நோக்கி நமது மன்றம் 13 உறுப்பினர்களே என்றாலும் நல்ல முறையில் இயங்கி வருகிறது.

இனிவரும் காலங்களில் திறமையாக செயல்படக்கூடியவர்கள் வந்து இந்த மன்றத்தை வழிநடத்த வேண்டும். அலுவலக வேலைகளுக்கிடையே இது போல சில பயணங்கள் நமக்கு மகிழ்ச்சியையும், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை என்பதை இதுநாள் வரை நடந்து வந்துள்ள நிகழ்ச்சிகள் வாயிலாக அறிய முடிந்தது.

மன்றம் என்பது அலுவலகத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட்டுவருகிறது என்பதை மனதில் கொண்டாலே போதும். பல பிரச்சினைகள் மன்றத்தில் வராது. இனி வரும் காலங்களில் தனிப்பட்ட பிரச்சினைகளை மன்றத்தில் விவாதிக்காமல் இருப்பது நல்லது. அது போல் மன்றத்தில் இருந்து விலகுவதாக அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவது சிறுபிள்ளைத்தனமானது. அப்படி போனால் அதன் இழப்பு என்பது மன்றத்தை விட்டு போகிறவர்களுக்கு தான் என்பதை அறிந்துகொண்டாலே போதும்.
தயங்கி நின்றவர்களை ஒருங்கிணைத்து, இந்த மன்றத்தை உருவாக்கியவன் என்கிற முறையில் இந்த மன்றத்தை செழிமைப் படுத்தவும், வலிமைப்படுத்தவும் கடைசி வரை முயல்வேன். மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது மன்றத்தை வழிநடத்த திறமையுள்ளவர்கள் முன்வரவேண்டும்.

என்றும் அன்புடன்
ரா.கிரிஷ்

Comments

Popular Posts