சுற்றுலா 2011


சுற்றுலா 2011 (ஆலப்புழா-கேரளா)

பைந்தமிழ் மனமகிழ்மன்றம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாக அன்டை மாநிலமான கேரளாவுக்கு செல்லலாம் என தீர்மானிக்கப்பட்டு ஆலப்புழா படகு வீட்டிற்கு செல்லலாம் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்பியதால் 19.08.2011 அன்று இரவு 9.15 மணிக்கு ஆலப்புழா விரைவுவண்டிக்கு பயணமனோம். எங்கள் குழுவில் ஜேம்ஸ் சார் மற்றும் குடும்பத்தினர், மகேஷ் மற்றும் குடும்பத்தினர், நான் மற்றும் எனது மனைவி மற்றும் மகன், வடிவழகி மற்றும் குடும்பத்தினர், நாகராஜன் மற்றும் குடும்பத்தினர், மலர் மற்றும் குடும்பத்தினர், சரவணக்குமார், மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

20.08.2011 காலை 5 மணிக்கெல்லாம் ஜேம்ஸ் சார் பல்விளக்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவியையும் அவர் விட்டுவைக்கவில்லை அவரையும் அதிகாலையிலேயே எழுப்பிவிட்டிருந்தார். வெளியிலேயே இப்படி என்றால் வீட்டில் இவர்களுடைய நிலைமையை எண்ணிப்பார்த்தேன். எல்லாரும் காலை உணவை இரயிலிலேயே முடித்துக்கொண்டோம். நான் காலை எழுந்ததும்  கண்ணுக்குகிட்டிய இயற்கை காட்சிகளை எல்லாம் வீடியோவில் பதிய வைத்தேன்.
எர்ணாகுளம் இரயில் நிலையம் வந்ததும் இரயிலே காலியானது. சங்கீதா மற்றும் மலர் ஆகியோர் குழந்தைகளுடன் கண்ணாம்பூச்சி விளையாடத்எதொடங்கினார்கள். காலை 11 மணிக்கு ஆலப்புழா இரயில் நிலையம் வந்தது. அங்கிருந்து Boat Jetty எனப்படும் படகு வீடுகளின் புறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். தண்ணீரில் மிதக்கும் வீடுகளாய் படகு வீடுகள் அணிவகுத்து நின்றன.


நாங்கள் ஆறு அறைகளைக் கொண்ட ஒருபடகு வீட்டை முன்பதிவு செய்திருந்தோம். எங்கள் படகு வீட்டில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் ஐக்கியமானோம். கீழே அறைகளும் மேலே சாப்பிடும் மேசைகளும் இருந்தன. ஜேம்ஸ் சார் படகு புறப்படப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். சற்று நேரத்தில் படகு புறப்பட்டது. எல்லாருக்கும் வரவேற்பு பானமாக இளநீர் வழங்கப்பட்டது.

சற்று நேரத்தில் படகு புறப்பட்டது. அனைவரும் குதூகுலத்துடன் இறக்கையை ரசிப்பதும் புகைப்படம் எடுப்பதுமாக இருந்தார்கள். சற்று நேரத்தில் சிறு தீவு ஒன்றில் படகு நின்றது. அங்கு இறங்கி Lapster எனப்படும் சிங்கஇறால்களை வாங்கிக் கொண்டோம். சிங்க இறால்களை பிடிப்பதற்காக மரவள்ளிகிழங்கில் தூண்டில்களை அமைப்பதைக் கண்டு மகிழ்ந்தோம். மதிய உணவு தயார் ஆனது சாப்பாடு, பப்படம், பாயசம், தேரோன், பொரியல், அவியல், கரிமீன் ஆகியவைகளை கொண்ட கேரளா முறைப்படியான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தோம்.

மீண்டு படகு அங்கிருந்து இயற்கைக் காட்சிகளை பின்னுக்கு தள்ளிக்கொண்டு படகு முன்னோக்கி விரைந்தது. வயல்களும் காயல்களும் அனைவரையும் கவர்ந்த வண்ணம் கடந்து சென்றது. இடைநில் ஒரு கள்ளுக்கடையில் படகு நின்றது கொஞ்சம் கள்ளு, சாப்பிடுவதற்கு சிலப் பொருட்களையும் வாங்கிக்கொண்டோம். அங்கே அமிர்தராஜ் இறங்கும் போது அவரது கேமிரா தண்ணீரில் விழுந்தது. படகில் இருந்தவர் இறங்கி அதை எடுத்துக்கொடுத்தார்.

மாலை கரைஓரத்தில் படகு நிறுத்திவைக்கப்பட்டது. மாலை காபியும், பழம்பொரியும் கொடுத்தார்கள். கொஞ்சம் இரவு ஆனதும் டிவியில் வேங்கை திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். சுற்றுலா சென்றவர்களில் சிலருக்கு பொழுதுபோக்குக்காக மதுபானம் அருந்தும் பழக்கம் இருப்பதால் மாலை கொஞ்சம் மதுபானம் அருந்தினோம். மதுபானம் அருந்தினாலும் அனைவரும் கட்டுக்கோப்புடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை அனைவரும் அறிந்திருந்ததால் தானே என்னவோ யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை அதற்காக எங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு உணவு தயாராக சற்று நேரமானதால் அகிஷிதா உறங்கி விட்டாள் சில குழந்தைகள் உறக்க நிலையில் இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது அனைவரும உணவு அருந்தினார்கள்.

காலை அனைவரும் எழுத்ததும் சரவணக்குமார் எங்களிடம் விடைபெற்று அவரது சொந்த ஊர் நோக்கிப் பயணமானர். மற்றவர்கள் காலை உணவை முடித்துக்கொண்டு காலை 9.30 மணிக்கு படகிலிருந்து இறங்கினோம்.


வண்டி எங்களுக்காக காத்திருந்தது. அங்கிருந்து அம்பலபுழா கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றோம். சிலர் மட்டும் கோயிலுக்குள் சென்றார்கள். வேறு மதத்தவர் உள்ளே செல்லக்கூடாது என்பதால் ஜேம்ஸ் சார் குடும்பத்தினர் செல்லவில்லை. மதங்களை விட மனித மனங்களை எப்போது மதிக்கிறார்களே அப்போது தான் நாடு உருப்படும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன்.

அங்கிருந்து கடற்கரை நோக்கி சென்றோம் கடற்கரை அலைகள் அழுக்குப்படிந்து கிடந்தது அதனால் ஜேம்ஸ் சார் குடும்பத்தினர் இறங்க ஆர்வம் காட்டவில்லை. அங்கிருந்து மதிய உணவை ஒரு ஹாட்டலில் முடித்துக்கொண்டோம். சில பொருட்களை வாங்க கடைத்தெருவுக்கு சென்றோம் நமது மன்ற உறுப்பிர்கள் சுற்றிப் பார்ப்பதைவிட பொருட்களை வாங்கத்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டேன்.
மாலை 3.30 மணிக்குஇரயில்நிலையம் வந்து சேர்ந்தோம். எங்கள் பயணம் முடிந்த துயரத்தலோ என்னவோ கேரளா மண்ணில் கண்ணீர் துளிகளுடன் கார்மேகங்கள் எங்களை வழியனுப்பி வைத்தது.
இரவு 7.30 மணிக்கு வண்டி திருச்சூர் இரயில் நிலையத்தில் நின்றது. அங்கு எனது மனைவியின் குடும்பத்தார் எங்களுக்கான இரவு உணவுடன் காத்திருந்தனர். அதை வாங்கிக்கொண்டு இரவு உணவை உண்டு மகிழ்ந்தோம். 21.08.2011 காலை மூன்று மணிநேர காலதாமதமாக இரயில் சென்னை வந்து சேர்ந்தது. அனைவரும் நன்றி கூறிப்பிரிந்தோம் மீண்டு ஒரு சுற்றுலாவில் ஒன்றுசேர.

சில குறிப்புகள்:
 • அக்‌ஷிதாவின் பாடல்கள் அனைவரின் பொழுதுபோக்கில் பெரும்பங்கு வகித்தது. மழலைச் சொற்களை விட மகிழத்தக்கது உலகில் என்ன இருந்துவிடப்போகிறது.
 • கடைசி வரை தேசிகாவுக்கு Boost வாங்கித்தர முடியவில்லை. அடிக்கடி அவளை வெளியே அழைத்துச் செல்வது நல்லது.
 • சூரியாவின் குறும்புத்தனம் சற்றுக் குறைந்துள்ளது.
 • சங்கீதாவுக்கு இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி தேவை
 • மற்ற சுற்றுலாவை போல் வடிவழகி இயல்பாக இல்லை ஒருவேளை அவரது உடல்நிலை காரணமாக இருக்கலாம்.
 • அனிஷ் ஓடிக்கொண்டே இருந்ததால் அவனை கவனிப்பதே பலருக்கு வேலையாக இருந்தது.
 • மகேஷ் துணைவியாரை பேசாமல் சன்னியாசத்துக்கு அனுப்பிவிடலாம். மகேஷ் நிலைமை என்னவாகும் என்று தான் தெரியவில்லை.
 • அமிர்தராஜ் எப்போதும் போல் அமைதிபடையாக இருந்தார்.
 • நாகராஜ் துணைவியார் புதுமுகம் என்பதால்  யாருடனும் அதிகம் ஒட்டாமல் இருந்தார். விரைவில் தேறிவிடுவார் என்று நினைக்கிறேன்.
 • கபிலன் அவர்கள் ஒரு ஆசிரியர் என்ற பந்தா இல்லாமல் இயல்பாக பழகினார்.
 • மலர் எப்போதும் போல் இல்லாமல் சற்று டென்ஷனாக இருந்தார் சிரிப்பொலி அதிகம் கேட்கவில்லை. (கடைசி வரை பாடவும் இல்லை)
 • சரவணக்குமார் இவரும் புதுமுகம்  ஆனாலும் அனைவருடனும் சகஜமாக பழகினார்.
 • மணிகண்டன் ஷேவிங் கிரிம்க்கு பதிலாக Fair and Handsame பயன்படுத்தியதை கடைசிவரை அறியதாவராய் அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கினார்.
 • ஜேம்ஸ் சார் இன்னும்கொஞ்சம் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கலாம். பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பதை மனதில் கொண்டால் நல்லது.
அன்புடன்
ரா.கிரிஷ்

Comments

 1. நண்பர்களே

  இந்த ஆளப்புழா பயணம் நன்றாக இருந்தது. என்ன குறை என்றால் கனியன், கெமிலா, சுசீந்திரன் மற்றும் பாஸ்கர்
  போன்றோர் வந்திருந்தால் இன்னும் கலைக்கட்டியிருக்கும் என நினைக்கிறேன். நான் எப்போதும் போல் தான் என் குழந்தைகளை
  கண்காணித்தேன். ஏனெனில் சுற்றீலும் தண்ணீர் இருக்குதே. கிரீஸ் பையன் 10 தடவை ஓதினால் 9 3/4 தடவை
  விழுந்துவிடுகிறான். நானும் என் மனைவியும் ரசித்தோம். மகேஷ், எப்பவும் அமைதி அது போல் அமிர்தராஜ் அவர்களும்.
  சங்கீதா சொல்ல வேண்டியது இல்லை, உலகம் சுற்றும் வாலிபன் கதாநாயகி "மேட்டா ரூங்ராத்" போல் தொப்பி அணிந்திருந்தார்.
  கிரீஸ் மனைவிக்கு ரொம்பவும் துணிச்சல் அதிகம், ஒரு கரப்பன் பூச்சியை அப்படியே எடுத்து தண்ணீரில் போட்டார்கள்.
  வடிவழகி, கபிலன் எப்பவும் அமைதி, ஆனால் சூரிய ரொம்ப சேட்டை.. அக்ஷிதா ஒரே வாய், பாட்டு, கதை என
  எல்லோரையும் மகிழ்வித்தது. சூசன் சங்கீதாக்கூட விளையாடும் போது தான் எனக்குத் தெரிந்தது அதுக்கு ரொம்ப விஷயம்
  தெரிகிறது என்று. மணிகண்டன் தமாஷ் பேர்வழி. சரவண குமார் அமைதி, மலர், அவர்கள் அக்கா மற்றும் அவர்கள் மகள்
  அமைதி. நான் நினைக்கவில்லை, அமிர்தராஜ் கேமரா கிடைக்கும் என்று. நாகராஜ் மனைவி பாவம் அவர்கிட்டெ மாட்டிகிட்டு
  முழிக்கிரார்கள். மகேஷ் மனைவி ஒரே விரதம், எனக்கு கோவை சரளா ஞாபகம் வருகிறது.

  சும்மா தமாஸுக்கு சொன்னேன்.

  ஜேம்ஸ்.

  ReplyDelete

Post a Comment

Popular Posts