இயற்கை



பயணம் என்பது நமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்ட காலம் இது. பொருள் தேட இடம்பெயர்ந்து வாழும் சூழ்நிலைதான் இப்போது அதிகமாகக் காணப்படுகிறது. அப்படி வாழ்பவர்களில் நானும் ஒருவன். வெகுகாலமாக என் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து பலவருடங்களாக சென்னையில் வசித்து வருகிறேன்.

இப்படிப்பட்ட இயந்திரத்தனமான நகரவாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கும் தருணங்களுக்காக ஏங்கியிருக்கிறேன். அப்படி அரிதாக வாய்க்கும் சந்தர்ப்பங்களை எந்த நேரத்திலும் தவறவிடுவதில்லை. இதில் நண்பர்களின் திருமணங்கள் மற்றும் என் உறவினர்களின் திருமணங்கள் என்று எதற்கானலும் எதைப்பற்றியும் கவலைப்படமால் கிளம்பிவிடுவேன். பயணம் செய்வதிலும், இயற்கை அழகை ரசிப்பதிலும் அப்படி ஒரு உற்சாகம் எனக்கு.

மனிதனின் ரசிப்பு தன்மையை வளர்த்துகொள்ள இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏங்கே நம்மவர்களில் சிலர் சுற்றுலா என்ற பெயரில் புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே இயற்கை சூழலை நாடிச்செல்கிறோம்.

நான் உங்களை கேரளா மாநிலத்தின் ஒரு இடத்திற்கு அழைத்துச்செல்கிறேன். இயற்கை அழகு கொஞ்சும் அந்த இடத்தில் தனிமையில் ஒரு ஒருமணிநேரம் நீங்கள் அந்த இடத்தில் இருக்க வேண்டும். அந்த ஒரு மணிநேரம் நீங்கள் அனுபவித்த விஷயங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிப்பாருங்கள். நிச்சயம் நீங்களும் ஒரு கவிஞனாகி இருப்பீர்கள். அப்படிப்பட்ட இயற்கை அழகை நாம் வருடத்தில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டும். அப்போது தான் மனதின் சீரோட்டத்தைச் சீர்படுத்தி பார்க்க முடியும்.

வாழ்க்கையில் இருக்கும் வெறுப்புகளை எல்லாம் கடந்தது இயற்கை. அப்படிப்பட்ட இயற்கையை ரசிக்க வேண்டும் என்னும் எண்ணம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழவேண்டும். ஒவ்வொரு நாளின் விடியலும் நமக்கு இயற்கை தான், ஒவ்வொரு நாளின் அஸ்தமனமும் நமக்கு இயற்கை தான். ஆனால் நாம் இதை எல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் இல்லை என்பது தான் உண்மை.


எத்தனை துன்பம் வைத்தாய் மனதில்
அத்தனையும் களைந்து வந்தேன் உன் காலடியில்
பூமி என்னும் உன் மடிசாயும் வேளையில்
மவுனம் என்னை தழுவதோ மாலையில்
ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையில்
எல்லாம் மயமாய் போனது உன்னை கண்ட வேளையில். . . . .



Comments

Popular Posts