உடல் தானம்



மரணத்தை நான்கு வகையாக பிரிக்கலாம். ஒன்று இயற்கையான மரணம், இன்னொன்று விபத்துகளால் உண்டாகும் மரணம், மற்றது தானாக தேடிக்கொள்கின்ற மரணம், நோயினால் உண்டாகும் மரணம். இதில் விபத்துக்களால் ஏற்படும் மரணம் தான் அதிக இழப்புகளாக உள்ளது. இதில் நமது கவனக்குறைவால் ஏற்படும் மரணம் தான் அதிகம்.

இது குறித்த சில தகவல்கள்

இதய‌ம் செய‌ல்படாம‌ல் ‌நி‌ன்று ‌வி‌ட்ட ‌பிறகு‌ம், மூளையானது இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌ம் வரை கூட மூளை இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ப்பது உ‌ண்டு. இது ‌கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.

‌பி‌ன்ன‌ர்தா‌ன் மூளை‌யி‌ன் இய‌க்கமு‌ம் ‌நி‌ன்று போ‌கிறது. இதை செ‌ரிபர‌ல் டெ‌த் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள். இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.


விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி தலை‌யி‌ல் காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் மூளை தனது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்‌தி‌யிரு‌க்கு‌ம். ஆனா‌ல் இதய‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களது உட‌ல்க‌ள்  தா‌ன் தானமாக அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.

இப்போது இந்தியா முழுவதும் பல இடங்களில் உடல்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பது பத்திரிக்கை செய்தி வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. இதற்கென பல மருத்துவமனைகளில் பலர் தங்களை பதிவு செய்து வைத்துக்கொள்கின்றனர். நானும் எனது மனைவியும் MIOT HOSPITALS என்ற மருத்துவமனையின் கீழ் இயங்கும் http://www.mode.org.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறோம். இந்த பதிவை படிக்கும் ஆர்வலர்கள் இந்த இணையதளத்தை பார்த்து படித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு மரணம் என்னை கடந்து சென்று ஒரு ஆண்டு நிறைவடையப்போகிறது. இதை பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஒருவருட காலமாக என்னை மீளாத்துரயத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் மரணம் தான் அது. அதுவும் அவனது திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் மரணம் அடைந்தான். அந்தச் சூழ்நிலையில் உடல்தானம் குறித்த எண்ணங்களோ அதை அவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும் என்ற எண்ணமே எனக்கு தோன்றவில்லை. இல்லை என்றால் இன்று அவனது உறுப்புகளாவது உயிர்வாழ்ந்திருக்கும். எனவே இது குறித்த விழிப்புணர்வையேனும் இந்த வலைப்பதிவைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் ஆகும். இன்று (19.02.2011) அவனது முதலாவது நினைவு நாள். அவனுக்காக இந்த வலைப்பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 


 அவனது ஆத்மா சாந்தியடைய அனைவரும் எனக்காக பிரார்த்தீப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

மண்ணாகி போகும் உடல் பாகங்களை
மனிதர்க்கு கொடுக்கலாமே........





Comments

Popular Posts