பெண்பார்க்கும் படலம்


பெண்பார்க்கும் படலம்


ஆண்களுக்கும் தான்
வேதனை பெண்பார்க்கும் படலம்...

காலையில் எழுந்து மீசைதிருத்தி
முகம்வழித்து
துணி தேய்த்து
அலங்கரித்து பரிட்சைக்கு செல்லும் புது மாணவனின்
மனோபாவத்துடன்
பெண் பார்க்க போனேன்..

ஆட்டோகாரனிடம் பேரம் பேசி
தேய்த்த துணி கசங்காமல்
உடலை உள்ளே திணித்து
இறங்கியவுடன் தலை சரி செய்து
பெண் வீட்டில் நுழைந்தால்..

முன்னமே புகைப்படம் அனுப்பியும்
பெண்ணின் உறவினர் கேட்பார்
இதில் யார் பையன்?

கூச்சமாய் கொஞ்சம் நெளிந்து
இருக்கையில் அமர்ந்ததும்
பெண்ணின் அப்பா ஆரம்பிப்பார்
பையனுக்கு எங்கே வேலை?
என்ன சம்பளம்?
என்ன படித்திருக்கிறான்?
கேள்விகள்... கேள்விகள்....

இவையெல்லாம் முடிந்து
பெண் வருவாள்....

மற்றவர் நம்மை கவனிக்கிறார்கள்
என்ற கூச்சத்துடன் ஒரு படப்படப்புடன் இருக்கையில்
பெண் வந்து சென்றிருப்பாள்
சரியாக பார்க்கவில்லையோ....

பெண்ணிடம் ஏதாவது பேச
வேண்டும் இல்லையெனில் ஊமை என்று
ஆகிவிடும் நம் நிலைமை
அதற்காய் அசட்டுதனமாய் சில கேள்விகள் கேட்டதும்
முடிவுக்கு வரும் பெண்பார்க்கும் படலம்

வெளியே வந்ததும்

பெண் கொஞ்சம் உயரம் கம்மி தான்
என் அம்மா..

பெண்ணின் அப்பா சரியாக பேசவில்லை
என் அப்பா..

பெண்ணின் முடி நீளமில்லை
என் தங்கை..

ம்..........
அடுத்த வாரம் எந்த வீடோ?

எங்களுக்கும் வேதனை தான்
பெண்பார்க்கும் படலம்.....

ரா.கிரிஷ்

Comments

  1. அனுபவித்து எழுதிய கவிதையோ... பேஷ், பேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular Posts