பிள்ளைப்பருவம்


பிள்ளைப்பருவம்

பிள்ளை பருவம் அது...

மழை பிடித்தது
வெயில் பிடித்தது
மண் பிடித்தது
மரம் பிடித்தது
குளம் பிடித்தது

சின்னதாய் நண்பர்
கூட்டம்
பாசியாறி படுத்து
உறங்க பக்கத்து விட்டுத் திண்ணை

பாதியில் மறந்து போன
பள்ளிக்கூட பாடம்
உண்டு பையில்

பள்ளிச் செல்லும்
பாதையெங்கும்
பார்வை மேயும்
பார்த்த பொருள் எல்லாம்
வாங்க தோன்றும்

இல்லாத காசுக்காய்
ஏங்கிய மனம்
இன்றும் உண்டு அந்த ரணம் மனதில்...

மழைக்காலம் அது
ஒலை குடிசை தனில்
நனையாத இடம் தேடி
அணைத்துப் படுத்துக் கொள்ள
அன்னை உண்டு அருகில்...

பண்டிகை என்று ஒருநாள்
புது துணியின் கனவு வந்து
கண்ணில் நிற்கும்
துவைத்து என் தாய் தருகையில்
அதுவும் புது துணிதான் இன்றும்...

பிள்ளை பருவம் அது....
ரா.கிரிஷ்

Comments

  1. மிகவும் அருமையாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts