ஆடை அநாகரிகம்



சமூக சீர்கேட்டின் முக்கியமான காரணங்களில் ஒன்று ஆடை அநாகரிகம். அன்றைய கால ஆடை அலங்காரங்களை இப்பொதெல்லாம் பழைய சினிமாக்களில் தான் பார்க்க முடிகிறது. என்ன ஒரு வருத்தமான செய்தி. பாவடை தாவணி என்கிற பெண்களுக்கான ஆடை முற்றிலும் அழிந்துவிட்டதாகவே கருதலாம்.

மானத்தை மறைக்கதான் ஆடை என்கிற நிலைபோய் இப்போது கவர்ச்சியை வெளிக்காட்டத்தான் ஆடை என்கிற நிலைக்கு தற்கால சில சதவீகித பெண்கள் வந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். வெட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு இந்த காலப்பெண்களுக்கு எங்கே வெட்கப்பட தெரிகிறது. வெட்கமா கிலோ என்ன விலை? என்று கேட்பவர்கள் தானே.

சில கல்லூரிகளில் கூட இவ்வாறன உடைகளுக்கு தடை விதித்துள்ளது பாராட்டத்தக்க ஒன்று. பல இடங்களில் சாதராணமாக கவனித்தால் நான் சொல்வது உண்மை என்று அனைவருக்கும் விளங்கும். பெண்களின் உள்ளாடைகள் வெளியில் தெரிவது போல் உடை அணிவதை சில பெண்கள் நாகரிகம் என்று நினைக்கிறார்கள். அது பார்ப்பவர்களுக்கு அநாகரிகமாகவும், அருவெறுப்பாகவும் தோன்றும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

உதாரணமாக நான் சிலநாட்களுக்கு முன் வேளச்சேரி ரயில்நிலையத்தில் ரயிலுக்கு காத்திருக்கும் வேளையில் இரண்டு பள்ளி மாணவர்கள் 10 வகுப்பு படித்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை உற்று நோக்கிக்கொண்டு இருந்தார்கள். என்ன என்று கவித்தேன். அவளது உள்ளாடைகள் வெளியில் தெரியும் வண்ணம் ஒரு உடை உடுத்தியிருந்தாள் இந்த மாணவர்கள் அந்தப் பெண்ணையே உற்றுப்பார்த்த படி அந்த பெண் சென்று ஏறிய அதே பெட்டியில் ஏறுவதை கவனித்தேன். நமது இளைய தலைமுறையை எவ்வாறு இந்த ஆடை நாகரிகம் தடம்மாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.

கல்லூரிப் பெண்கள், ஐடி துறையில் பணிபுரியும் பெண்கள் தான் இந்த மாதிரி உடை உடுத்திகொள்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். திருமணமான சில குடும்ப பெண்கள் கூட இப்போது இந்த விதமான ஆடைகளை அணியதான் விருப்பப் படுகிறார்கள். சில கணவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள் ஏன் என்றால் என் மனைவி ரொம்ப மார்டன் என்று செல்லலாம் இல்லையா அதற்கு தான். இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு பாடலின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேலை உடுத்த தயங்கிறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டிறியே

என்பது தான் அந்தப்பாடல். இவர்களையெல்லாம் திருத்தவோ, அல்லது திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கவோ முடியாது.

நம்மால் ஒன்று செய்யமுடியும். நமது புதிய தலைமுறைக்கேணும் ஆடை நாகரிகம் என்றால் என்ன என்பதை மனதில் பதியும் படி அவர்களுக்கு விவரம் புரியும் வயதில் எடுத்துரைக்க வேண்டும். கலாச்சாரச் சீர்க்கேட்டை நோக்கி பயணத்திக்கொண்டு இருக்கும் நாம் வரும் தலைமுறையையேணும் காலச்சார மரபுகளையும், மனித உணர்ச்சிகளையும், பண்பாட்டையும் புரிந்து பயணிக்கும் ஒரு தலைமுறையாக மாற்ற முன்வருவோம்.

Comments

Popular Posts