சுற்றலா தலங்கள் (கேரளா) 7

 பத்தினம்திட்டா
சபரிமலை

கேரளாவின் புகழ்பெற்ற திருத்தலம். பல மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள தலம் இது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் மகரவிளக்கு காலங்களாக கருதப்பட்டு இந்த காலங்களில் மகரவிளக்கு பூஜைகள் நடக்கின்றன. மற்றும் ஐயப்பன் மகரஜோதியன்று ஜோதிவடிவில் இங்கு காட்சி தருகிறார். தற்போது எல்லா மாததொடக்கத்திலும் இங்கு கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

பந்தளம்

பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்தாக கருதப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடமாகும். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் செங்கனுர் ஆகும்.

மலையாளப்புழா

இது ஒரு பகவதி கோவில் ஆகும். நம்பிக்கையுள்ள மக்களின் கனவுகளை நனவாக்கும் தெய்வமாக இங்கு பகவதி காட்சிதருகிறார். இங்கு அழகிய ஓவியங்கள், மற்றும் பாறை சிற்பங்கள் உள்ளன. இது பத்தனம்திட்டா நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கொடுமென்

இதன் கவர்ச்சி சிலந்தி கோவில் ஆகும். சிலந்திகளால் உண்டாகும் விஷ முறிவுகளுக்கு இங்கு வந்து வணங்கினால் குணமடையும் என்று சொல்லப்படுகிறது. மேலும் புகழ் பெற்ற நூலான அச்சர்யா சூடாமணி என்ற சமஸ்கிருத நூலை எழுதிய ஸ்ரீ சக்தி பத்ரா இந்த ஊரில் தான் பிறந்தார்.

மன்னாடி

வேலுத்தம்பிதளவா என்கிற விடுதலைப்போராட்ட வீரர் தனது கடைசி காலத்தில் இங்கு தான் இருந்தார். புகழ்பெற்ற ஒரு பகவதி கோவில் இங்கு உள்ளது. கற்சிலைகளும் உள்ளன. உஷாபலி என்ற திருவிழா இங்கு பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இங்கு நாட்டுப்புறகலை இங்கு நடத்தப்பட்டு வருகிறது.

பெருமத்தேதேனருவி

இந்த புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மலைகளில் ஜீப் மூலம் செல்லலாம்.

கோனாய் யானைகள் பயிற்சி மையம்

இது கேரளா எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இங்கு யானைகள் மரத்தால் ஆன வீட்டுக்குள் அடைக்கப்படுகின்றன. இதை யானைக்கூடு என்கிறார்கள். இந்தக் கூட்டுக்குள் வைத்து காட்டு யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றும் இங்கு காட்டுக்குள் செல்ல யானைகள் சாவாரி உள்ளது.

ஆரன்முளா

பம்பாநதிக்கரையில் அமைந்துள்ள இடம் ஆரன்முளா. செங்கனூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருக்கும் கிருஷ்யர் கோவில் புகழ்பெற்றது ஆகும். ஓணம் பண்டிகையை ஒட்டி இங்கு நடத்தப்படும் படகுப்போட்டி புகழ்பெற்றது ஆகும்.

ஆரன்முளா கண்ணாடி

ஆரன்முளா என்றாலே கண்ணாடி என்பது கேரளா மக்களுக்கு தெரிந்த ஒன்று. இங்கு செய்யப்படும் கண்ணாடிகள் உலகின் பல பாகங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல தலைமுறைகளாக இக்கிருக்கும் மக்கள் இந்தத்தொழிலை செய்து வருகிறார்கள்.


Comments

Popular Posts