சுற்றலா தலங்கள் (கேரளா) 6

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் முன்பு திருவன்ரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது கேரளாவின் தலைநகராமாக விளங்குகிறது. அனந்தா என்ற கடவுளின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.

ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில்

திருவனந்தபுரத்தில் புகழ்வாய்ந்த கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் இங்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திராவிடக் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்டக் கோவில் இது. திருவிதாங்கூர் மகாராஜா இந்தக் கோயிலை 1733 ஆம் ஆண்டு கட்டினார்.

கோவளம் கடற்கரை

கோவளம் கடற்கரை 16கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலகத்தரத்திற்கு இணையாக புணரமைக்கப்பட்ட கடற்கரை கோவளம் கடற்கரை 1930 முதல் இந்த கடற்கரைக்கு வெளிநாட்டினார் வந்து செல்கின்றனர். கடற்கரையின் கரையில் அமைந்துள்ள தென்னை மரங்கள் இந்த கடற்கரையின் அழகை மேலும் அழகூட்டுகின்றன. மேலும் இந்த கடற்கரையின் அருகில் கலங்கரை விளக்கம் உள்ளது.

மாளிகை அருங்காட்சியகம்

சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புத்தன்மாளிகை அருங்காட்சியம் திருவிதாங்கூர் மகாராஜாவின் புராதன பொருட்கள் மற்றும் இதர கேரளா கலைப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது.

பத்மநாபபுரம் மாளிகை

திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது இந்த மாளிகை. 400 வருடங்களாக இந்த மாளிகை பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த மாளிகை தமிழ்நாட்டில் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாளிகைக்கு திங்கள்கிழமை விடுமுறை.

வேளி டூரிஸ்ட் கிராமம்

அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு நகரம் எனலாம். இங்கு தண்ணீர் விளையாட்டுகள் மற்றும் தொங்கு பாலம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, உணவு விடுதி, பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. இது 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 வரை இது இயங்கி வருகிறது.

அக்குளம் படகு மன்றம்

இது பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு படகு போக்குவரத்தும் உள்ளது.‘

சங்குமுகம் கடற்கரை

இது நடப்பதற்கும் மீனவர்களின் செயல்பாடுகளை பார்ப்பதற்கும் ஏற்ற ஒரு கடற்கரை நகரமாகும். இங்கு சாலையோரத்தில் அழகிய கல்சிற்பங்கள் கண்போரை வியக்க வைக்கின்றன.

நெய்யாறு அணைக்கட்டு

திருவனந்தபுரத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதன் அருகில் அமைந்துள்ள மலைகளும், ஏரியும் கண்போரை மகிழ்விக்கும். இங்கிருந்து சிங்கங்களை இயற்கை சூழலில் பார்ப்பதற்கு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். இங்குள்ள ஏரியில் படகு சாவரியும் உள்ளது. மற்றும் இங்கு ஒரு முதலைப் பண்ணையும் உள்ளது. மற்றும் ஒரு நீச்சல் குளம் உள்ளது.

பொன்முடி

பொன்முடி ஒரு மலைகள் நிறைந்த இடமாகும். மலையேற்றம் இங்கு பொழுதுபோக்காக உள்ளது. இங்கு ஒரு மான்கள் பூங்காவும் உள்ளது. பறவைகளை காண்பதற்கு இங்கு அதிகம் பேர் வருகிறார்கள். மேலும் இயற்கையின் அழகை ரசிக்க சிறந்த இடமாகும்.

Comments

Popular Posts