சுற்றலா தலங்கள் (கேரளா) 5

கோட்டயம்

கேரளா மாநிலத்தின் மலைநிறைந்த நகரங்களில் இது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இயற்கைக்காட்சிகளை ரசிக்க சிறந்த இடங்கள் இங்கு ஏராளம். ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நகரம். தேனிமாவட்டத்திலிருந்து வெகு அருகாமையில் உள்ளது இந்த நகரம்.

குமரகம்

தென்னைமரங்களும் மங்கோரோவ் காடுகளும் நிறைந்த பகுதியாகும். இது வேம்பநாடு ஏரியின் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் படகுவீடுகள் இயற்கை அழகை ரசிக்க இயக்கப்படுகின்றன. மற்றும் ஆயுர்வேத சிகிச்சை, யோகா, படகுசாவரி, மீன்பிடித்தல், நீச்சல் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உண்டு.

குமரகம் பறவைகள் சரணாலயம்

இது இயற்கையாக வேம்பநாடு ஏரியின் அருகில் அமைந்துள்ளது. இங்கு சீசன் நேரங்களில் வெளிநாடுகளிலிருந்து பல பறவைகள் வந்து தங்கிச்செல்கின்றன. சிறிய காடுபோன்ற தோற்றத்தில் அமைந்துள்ள சரணாலயம் மிகவும் அழகாக தோற்றமளிக்கிறது.

வெம்பநாடு ஏரி

கோட்டயத்தின் அழகை மேருகூட்டுவது இந்த ஏரியாகும். இதில் மிதக்கும் படகு வீடுகள் கண்பவர் மனதைக் கொள்ளைக்கொள்ளும். இது சிறந்த ஒரு பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது.

அய்யப்பரா

பாண்டவர்கள் வானவசத்தின் போது வந்து தங்கிச் சென்றதாக கருதப்படும் இடம். கடல்மட்டத்திலிருந்து 2000 அடி மேல் உள்ளது. இங்கிருந்து சூரியன் மறையும் அழகை ரசிக்க சிறந்த இடம்.

Comments

Popular Posts