சுற்றலா தலங்கள் (கேரளா) 4
ஆலப்புழை
கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. மிகப்பெரிய பேக்வாட்டர்களை
கொண்டது. இங்கு இருக்கும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற ஊர். கயிறுகளால் உண்டாக்கப்படும்
பொருட்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்றும் செம்மீன் (எரா) இங்கு
வளர்க்கப்பட்டு பலஇடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரான்முளா படகு போட்டி இங்கு
வருடந்தோறும் நடத்தப்படுகிறது. நெற்களஞ்சியம் என போற்றப்படும் குட்டநாடு இங்கு தான்
உள்ளது. கேரளாவின் கிராமத்தின் அழகை ரசிக்க சிறந்த இடமாக இது விளங்குகிறது.
பேக்வாட்டர்கள்
ஆலப்புழையின் அழகை ரசிக்க சிறந்த இடம் பேக்வாட்டர்ஸ் ஆகும்
இதன் கரைகளில் அமைந்துள்ள, கோயில்கள், தேவலாயங்கள் மற்றும் தொழில்கூடங்கள் ஆகியவற்றை
ரசித்தபடி பயணம் செய்வது இனிமையாக இருக்கும். இது ஆலப்புழையில் தொடங்கி ஜெட்டி எனப்படும்
இடம் வரை பரந்துள்ளது.
படகுபோட்டி
ஆலப்புழையின் அழகை மேருகூட்டுவது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டியாகும்.
நேருகோப்பை படகுப்போட்டிகள் இங்கு புகழ்ப்பெற்றது. இது புன்னமட நதியின் மேல் நடத்தப்படுகிறது.
இது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதை காண வெளிநாட்டுப் பயணிகள்
அதிக அளவில் வருகிறார்கள்.
கிருஷ்ணபுரம் மாளிகை
இது ஆலப்புழையில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் கொல்லம்
போகும் வழியில் அமைந்துள்ளது. இந்த மாளிகை 18நூற்றாண்டில் கட்டப்பட்டது. மார்த்தண்ட
வர்மா காலத்தில் கேரளா காலச்சரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் கேரளா கட்டடக்கலைப்பாணியில்
கட்டப்பட்டது. இங்கு சிலைகள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குட்டநாடு
கேரளாவின் நெற்களஞ்சியமாக கருதப்படும் இடம் இது. உலகிலேயே
கடல் மட்டத்திற்கு அருகில் விவசாயம் செய்யும் ஒரு இடமாக இது கருதப்படுகிறது. செங்கனச்சேரியில்
இருந்து இந்த இடத்திற்கு படகு போக்குவரத்து உள்ளது.
முல்லைக்கல் ராஜேஸ்வரி கோயில்
இந்த கோவில் பெண்தெய்வமான ராஜேஸ்வரி வீற்றிருக்கிறாள்.
நவராத்தி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆலப்புழை மக்களுக்கு இஷ்டதெய்வமாக
விளங்குகிறாள்.
பதிரா மணல்
வெம்பநாடு ஏரியில் அமைந்துள்ள ஒரு தீவுவாக இது கருதப்படுகிறது.
இது தன்னீர்முக்கம் மற்றும் குமரகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இங்கு
நூற்றுக்கணக்கான விதவிதமான பறவைகள் வந்து செல்லும் இடமாக இது விளங்குகிறது.
ஆம்பலபுழா கிருஷ்ணர் கோவில்
கேரளா கட்டக்கலையை பறைச்சாற்றும் விதமாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பிரசித்தப்பெற்ற கோவில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. அம்பலபுழா பால்பாயசம்
புகழ்பெற்ற ஒன்றாகும். ஒட்டந்துள்ளல் எனப்படும் கலையை குஞ்சன்நம்பியார் என்பவர் இங்கு
முதன்முறையாக நடத்திக்காட்டினார்.
ஆர்த்துங்கள் சார்ச்
சேர்த்தலை என்ற இடத்திலிருந்து 22 கிலோமீட்ர் தொலைவில்
அமைந்துள்ளது. போர்ச்சுகிய மதகுருமர்கள் இந்த தேவலாயத்தைக் காட்டினார்கள்.
செம்பக்குளம் சார்ச்
இது செயின் மேரி சார்ச் என அழைக்கப்படுகிறது. மிக பழமைவாய்ந்த
தேவலாயங்களில் இதுவும் ஒன்றாகும். செட் தாமஸ் கட்டிய 7 தேவலாயங்களில் இதுவும் ஒன்றாகக்
கருதப்படுகிறது.
மன்னார்சல ஸ்ரீநாகராஜா கோவில்
இது ஆலப்புழையிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நாகா தோஷம் தீர இந்த கோவிலுக்கு சென்று வழிபாடுதல் ஒரு வழக்கமாக உள்ளது.
சோட்டனிக்கரை பகவதி கோவில்
பகவதி தெய்வமாக இங்கு வழிபாடப்படுகிறார். பிப்ரவரி மற்றம்
மார்ச்சு மாதங்கள் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. பேய் பிடித்தவர்களுக்கு இங்கு
வழிபாடு செய்யப்படுகிறது.
ஆலப்புழை கடற்கரை
கேரளா கடற்கரைகளில் அழகு மிகுந்த கடற்கரைகளில் ஒன்றாகும்.
இந்த கடற்கரையை ஒட்டி விஜயா பார்க் சிறுவர்களுக்கான சிறந்தப் பொழுதுபோக்கு இடமாக உள்ளது.
மாரரிக்குளம்
ஆலப்புழையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள
கடற்கரை சார்ந்த பகுதியாகும். இது ஒரு மீனவ கிராமமாகும். மேலும் தண்ணீர் விளையாட்டுகளுக்கு
சிறந்த இடம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.
















Comments
Post a Comment