சுற்றலா தலங்கள் (கேரளா) 3


எர்ணாகுளம் (கொச்சி)


இந்த நகரம் மிக நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். துறைமுகம், விமானதளம், ரயில்நிலையம் ஆகிய மூன்று அருகருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். வெள்ளைக்காரர்கள் ஆடசியில் இந்த நகரம் மிகசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. ஏற்றுமதியும், மீன்பிடித்தொழிலும் இங்கு தொழிலாக உள்ளது. சுற்றுலா துறையினர் அதிகம் விரும்பும் ஒரு நகரமாக இந்த நகரம் உள்ளது.

சீன மீன்பிடிக்கும் வலை – கொச்சின்

சைனாவின் மன்னான குபுலிகான் என்பவன் இந்த மீன்பிடிக்கும் முறையை கேரளாவில் அறிமுகப்படுத்தினான். தற்போது கொச்சி நகரத்தில் மட்டுமே இந்த மீன்பிடிக்கும் முறைக் காணப்படுகிறது. இதில் மீன்பிடிப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது.

போர்ட் கொச்சி கடற்கரை

இது ஒரு இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையாக விளங்குகிறது. மாலை சைனா மீன்பிடிவலைகளின் பின்னணியில் சூரியன் மறையும் அழகை ரசிப்பது மிக அழகாக இருக்கும். ஐரோப்பா பாணியில் கட்டப்பட்ட பங்களாக்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. புதிய நல்ல மீன்களை ருசிப்பதற்கு சிறந்த இடமாகும்.

சென்ட் பிரன்சிஸ் சார்ச் – போர்ட் கொச்சி

ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிக பழமையான தேவலாயம் இது.  மூன்றாவது முறையாக கேரளா வந்த வாஸ்கோடகாமவால் கட்டப்பட்டது. ஐரோப்பிய கட்டிடப்பாணியில் கட்டப்பட்ட தூய்மையான தேவலாயமாக இது விளங்குகிறது.

டாச்சு மாளிகை (மட்டஞ்சேரி மாளிகை)

இது ஒரு டாச்சு மாளிகை ஆனால் இது போர்ச்சுகியர்களால் கட்டப்பட்டது. 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.  பல கொச்சி மன்னர்களால் இந்த மாளிகை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அழகிய மகாபரதம் மற்றும் ராமாயண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது மட்டஞ்சேரி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

மாலைக்கோட்டை (திருப்புணித்துரா)

19ஆம் நூற்றாண்டில் கொச்சி மன்னரால் கட்டப்பட்டது. தற்போது இது ஒரு அருங்காட்சியமாக செயல்பட்டுவருகிறது. இங்கு மன்னர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது கொச்சியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மங்கலவானம் பறவைகள் சரணாலயம்

மங்கலவானம் ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும் இது கொச்சியின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இது கேரளா உச்சநீதிமன்றத்தின் அருகில் அமைந்துள்ளது.

கேரளா வரலாற்று அருங்காட்சியம் (கலமசேரி)

இந்த அருங்காட்சியகத்தில் ஒலிஒளிக்காட்சியாக கேரளாவின் வரலாறு மற்றும் புகழ்பெற்றவர்களின் சுயசரிதை ஆகியவை காட்டப்படுகிறது. மற்றும் கேரளாவின் புகழ்பெற்ற ஓவியங்களும் இங்கு உள்ளன.

செராய் கடற்கரை

இது ஒரு அழகுமிகுந்த கடற்கரை இதன் அருகே சிறிய தீவுகளும் உள்ளன. இங்கு தென்னைமரங்களும், நெல் வயல்களும் நிறைந்த இடமாகும். வைப்பன் எனப்படும் இடத்திற்கு செல்ல படகு போக்குவரத்தும் இங்கு உள்ளது.

வீகாலேண்ட்

தென்னிந்தியாவின் ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக இது விளங்குகிறது. கொச்சியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இது அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாக இது விளங்குகிறது.

விலிங்டன் தீவு

இந்த தீவுக்கு செல்ல படகு சாவரி உள்ளது. இந்த தீவின் அருகில் மற்ற சில சிறிய தீவுக்கூட்டங்களும் உள்ளன. மற்றும் இந்த கடற்படை பிரிவும் இங்கு செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் இங்கு டால்பின் கூட்டங்களை கண்டு களிக்கலாம்.

கலாடி

இது கொச்சியிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது பெரியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்துக்களின் விசேஷ தலமாக இது விளங்குகிறது.


Comments

Popular Posts