சுற்றலா தலங்கள் (கேரளா) 2


பாலக்காடு

கேரளாவின் நுழைவாயிலாக அமைந்துள்ளது. ஆறுகளும், மலைகளும், அணைக்கட்டுகளும் பாலக்காட்டின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. அருமையான காடுகளையும் உள்ளடக்கியது. பால பூக்கள் பூக்கும் மரங்கள் நிறைந்த நகரம் ஆகையால் தான் இதற்கு பாலக்காடு என்று பெயர் வந்தது.

பாலக்காடு கோட்டை

பாலக்காடு நகரத்திலேயே இது அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள கோட்டைகளில் இது மிகவும் அழகானது. பழைய சலவைகற்களால் கட்டப்பட்டது இந்தக் கோட்டை, ஹைதர் அலியால் 1766ஆம் ஆண்டு இதைக் கட்டினார். பின்னர் பிரிட்டீஷ் ஆட்சியின் போது இது 1790 ஆம் ஆண்டு இது புணரமைக்கப்பட்டது. தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுநிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இது.

மயிலாடும் பாறை

இது ஒரு மயில்கள் சாரணலாயம் ஆகும். இது பாலக்காட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நெல்லியம்பதி

இது பாலக்காட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த மலைவாழ் தலமாக உள்ளது. 10 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கிருந்து பாலக்காட்டின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.

மலம்புழா அணைக்கட்டு

பாலக்காட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது. அழகிய நிலையில் இங்கு பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இரு ஒரு சிறிய மலைகுன்றின் மேல் அமைந்துள்ளது. ரோப்கார் வசதியும் இங்கு உள்ளது. மேலும் படகு சாவரியும் உள்ளது. பாலக்காட்டிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நூறுவிதமான ரோஜா இங்கு உள்ளன.

பொத்தண்டி

பாலக்காட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆலயம், மரவேலைப்பாடுகளும், கற்சிற்பங்களும் இந்த ஆலயத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

தொனி

பாலக்காட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது தொனிமலையில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியும் உள்ளது.

மங்களம் அணைக்கட்டு

இது 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் விளங்குகிறது.

பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்

இது பாலக்காட்டிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரியவகை விலங்கினங்கள் இங்கு உள்ளன. இங்கு மரவீடுகளும் உள்ளன. படகு போக்குவரத்தும் இங்கு உள்ளது.


Comments

Popular Posts