சுற்றலா தலங்கள் (கேரளா) 1



திருச்சுர் மாவட்டம்-அறிமுகம்

வரலாற்று பதிவுகளில் அதிகம் இடம்பிடித்த கேரளா மாநிலத்தின் ஒரு மாவட்டம் திருச்சுர், கேரளா மாநிலத்தின் கலைகளின் பிறப்பிடம் என்று வர்ணிக்கப்படும் மாவட்டம். திப்புசுல்தான் மற்றம் டச்சு, பிரிட்டிஷ் ஆகியோர் திருச்சுர் பூரத்தை கண்டு மகிழ்ந்ததாக வரலாற்று பறைசாற்றுகிறது. கலையை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேரளா கால மண்டலம், கேரளா சாகித்திய அகாடமி, கேரளா சங்கீதா நாடக அகாடமி ஆகியவை இங்கு அமைந்துள்ளது மேலும் சிறப்பு. திருச்சுர் ரயில் நிலையம் இங்கு முக்கியமான ரயில்நிலையம் ஆகும். அருகில் உள்ள விமான தளம் நெடும்பாசேரி விமான நிலையம் மேலும தரைமார்க்கமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுடன் இந்த மாநிலம் இணைக்கப்பட்டுள்ளது.

  • அருங்காட்சியகம்

இது திருச்சுரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய அருங்காட்சியகம் ஆகும். இங்கு மரச்சிற்பங்கள், உலோக சிற்பங்கள், கதகளி தொடர்பான ஆபரணங்கள் உள்ளன. மேலும் கேரளாவின் கலைத்திறனை பறைசாற்றும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. கேரளா மாநிலத்தின் விளக்குகளின் சேகரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியம் கலை 10 மணிமுதல் மாலை 5 மணி திறந்திருக்கும். திங்கள் கிழமை விடுமுறை தினமாகும்.


  • சிறுதுருத்தி (கதகளி நடனப்பள்ளி)

இது திருச்சுரின் வடக்குதிசையில் 29 கிலோமீட்டர் தூரத்தில் செர்ணுர் ரயில்நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு கதகளி நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் இசை, நாடகம் மற்ற நடனங்களுடன் மோகினி ஆட்டம், கூடியாட்டம், ஓட்டம்துள்ளல் போன்ற நடனங்களும் பயிற்றுவிக்கப் படுகின்றன.

  • உயிரியல் பூங்கா

திருச்சுர் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இது 13.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அனைத்து வகையான விலங்குகளும் இங்கு சிறிய எண்ணிக்கையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  •   விலங்காகுன்னு

திருச்சுரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு சிறிய மலை ஆகும். சிறந்த பொழுதுபோக்கு தலமாகக் கருதப்படுகிறது. இந்த மலையின் மேல் இருந்து இயற்கை அழகை ரசிப்பது மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

  • அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

சாலக்குடியில் இருந்து கிழக்குநோக்கி இது அமைந்துள்ளது. சோலையர் காடுகளின் வழியே இது பாய்ந்து வருகிறது. இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி காண்பவர் மனதை கொள்ளைக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

  • புன்னத்தூர் கோட்டை

இது குருவாயூர் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வழங்கப்படும் யானைகளின் பராமரிப்பு இடமாக இது உள்ளது. 40 யானைகளுக்கும் மேல் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. எல்லா யானைகளை அருகில் நின்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது.

  • அன்னகாயம் ஏரி

இது சாலக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சோலையர் காட்டில் உள்ள யானைகளுக்கு நீர் ஆதராமாக விளங்குகிறது. பாறைகளுக்கு இடையே இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது இந்த ஏரி.

  •      பீச்சி அணைக்கட்டு

இது திருச்சுர் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்து படகு சாவரி வசதி உள்ளது. பிரைவேட் பேருந்துகள் அதிக அளவில் இந்த இடத்திற்கு இயக்கப்படுகின்றன.

  • திருப்பிராயர் கோவில்

திருச்சுர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் இது அமைந்துள்ளது. இது ராமபிரானுக்காக அமைக்கப்பட்ட முக்கியமான கோவில் ஆகும். ஏகாதேசி பண்டிகையின் போது 21 யானைகளுடன் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.


  • கொடுங்கல்லூர் பகவதி கோவில்

சேர மன்னன் செங்குட்டுவன் ஆணைக்கிணங்க கண்ணகிக்காக கட்டப்பட்ட கோவில் ஆகும். இது துர்கை கோவிலாக போற்றப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையான மகரசங்கராந்தி இங்கு கொண்டாடப்படுகிறது. மேலும் பரணி திருவிழா சிறப்பு வாய்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது.

  •   வடக்குநாதன் கோயில்

மிகப்பழமை வாய்ந்த கோயில்களில் இதுவும் ஒன்று. கேரளா கட்டக்கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்சுர்பூரம் மற்றும் குடைமாற்றம் இங்கு தான் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் அல்லாதோர் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

  • குருவாயூர் கோவில்

திருச்சுரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிருஷ்ணர் இங்கு குழந்தை வடிவமாக காட்சி தருகிறார். இந்துக்கள் அல்லாதோர் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு தினம் தோறும் அன்னதானம் வழங்கப்பட்டுகிறது. துலாபாரம் என்னும் நேர்த்திகடன் இங்கு விசேஷமாக கருதப்படுகிறது. முகூர்த்த நாளில் கணக்கிடமுடியாத அளவில் இங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.









Comments

Popular Posts