செஞ்சிகோட்டை - சுற்றுலா

10.09.2010 அன்று காலை 8.30 மணிக்கு எங்கள் சுற்றுலா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. கிட்டதட்ட சிறுவர்களையும் சேர்த்து 27 பேர் இருந்தோம். ஜேம்ஸ் சார் தாம்பரத்தில் ஏறிக்கொள்வதாக சொல்லியிருந்தார். அவரை கண்டிப்பாக ஏற்றிக் கொண்டு தான் போகவேண்டும். ஏன் என்றால் எங்கள் காலை டிபன் அவரிடம் தான் உள்ளது. இயக்குனரும் தாம்பரத்தில் ஏறிக்கொள்வதாக சொல்லியிருந்தார். தாம்பரத்தில் ஜேம்ஸ் சார் ஏறிக்கொண்டார்.

போகும் வழியில் சாந்தியையும் அவரது மகனையும் ஏற்றிக்கொண்டோம். இயக்குனரும் ஏறிக்கொண்டார். அனைவரும் ஆர்வமுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். வண்டி எப்படியும் போய் சேர 3 மணி நேரமாவது ஆகும் என்பதை உணர்ந்து ஹேமாமாலினி வண்டிக்குள்ளேயே சில விளையாட்டுகளை விளையடாலாம் என்று விளையாடத் தொடங்கினோம். நேரம் போகும் என்பதற்காக எல்லாரும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டார்கள். பாஸ்கர் சார் மட்டும் எப்போது தூங்கலாம் என்று பார்த்துக்கொண்டு இருந்தார். அனைவருக்கும் பசிக்கத் தொடங்கியது. ஏதாவது இடம் கிடைத்தால் சாப்பிடலாம் என்று காத்திருந்தோம். செங்கல்பட்டு தாண்டி ஒரு ஹைவே ஓரத்தில் வண்டியை நிறுத்தி அனைவரும் காலை டிபனை முடித்துக் கொண்டோம்.


அங்கிருந்து சுமார் 12 மணிக்கு செஞ்சிக்கோட்டை சென்றடைந்தோம். அங்கு உள்ள சிவன்கோவிலில் எங்களுக்கான மதிய உணவு வந்திருந்தது. நான் அதை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டேன். மற்றவர்கள் ராணி மலையில் ஏறிவிட்டு வருவதாக சொல்லி மலை ஏறப்போனார்கள். 

மதியம் 2.30 மணிக்கு தான் திரும்பி வந்தார்கள். அனைவருக்கும் பசித்ததால் சாப்பிட அமர்ந்தார்கள். நான் மற்றும் மகேஷ், சுசீந்திரன், மணிகண்டன் ஆகியோர் பரிமாறத் தொடங்கினோம். அனைவரும் சாப்பிட்டு முடிக்க 3.15 மணி  ஆகிவிட்டது. பின்பு குழந்தைகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் சில விளையாட்டுகளை நடத்தினோம். வெற்றிபெற்றவர்களுக்கு திருமதி. வடிவழகி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. 


அங்கிருந்து செஞ்சிகோட்டை மலைக்கு சென்றோம். ஆனால் நேரம் ஆகிவிட்டதால் அங்கிருக்கும் அலுவலர் உள்ளே போகமுடியாது என்று கூறினார். ஏமாற்றத்துடன் திரும்பினோம். வெளியில் நின்று கோட்டையின் அழகை ரசித்தோம்.

நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் அங்கிருந்து புறப்பட்டோம். போகும் வழியில் ஒரு டீக்கடையில் நிறுத்தி டீ குடித்தோம். செஞ்சிக்கோட்டையை முழுமையாக பார்க்க முடியாமல் போனாலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒரு நாளை கழித்த சந்தோஷத்துடன் பயணமானோம். 

வாழ்க்கையில் நமது விடுமுறை நாட்களை இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம் வரும் நாட்களுக்கான ஓட்டத்தில் களைப்பு ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளவும், நமது குழந்தைகளின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு காரணமாய் அமையலாம். 

எனவே இனிவரும் சுற்றுலாக்களை ஒரு நினைவாக்க நமக்குள் இருக்கும் பொறாமை, பகை, ஏற்றத்தாழ்வுகளை களைந்து ஒன்றுபட்டால் இனி வரும் நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சியாய் அமையும் என நம்புகிறேன்.

Comments

 1. இம்மாதிரியான சுற்றுலாவில் நாம் அனைவரின் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்படியான ஒரு சுற்றுலாவினை மீண்டும் செல்ல மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 2. அட
  வாழ்க்கையில இப்படி ஒரு வாய்ப்பா
  மகிழ்ச்சி
  ஆனா
  எங்க மாதிரி ஆட்கள காணோமே
  அதுதாங்க தமிழ்ப்படித்தவர்கள காணோமே

  ReplyDelete

Post a Comment

Popular Posts