ஆசைப்படு

    ‘ஆசை’ யாருக்கு இல்லை அந்த ‘ஆசை’

நல்ல வாழ்கைக்கு ஆசை
நல்ல வேலைக்கு ஆசை
நல்ல மனைவி அமைய ஆசை
நல்ல கார் வாங்க ஆசை
நல்ல பேர் எடுக்க ஆசை
நிறைய காசு சம்பாதிக்க ஆசை

ஆசை இல்லையெனில், வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. முதலில் ஆசைப்பட வேண்டும். பின்னர் அதனை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

    ஆசைப்படுவதில் தவறில்லை, அந்த ஆசை நிறைவேற நாம் நம்மை தகுதியுடைவராக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து மற்றவர் மேல் குற்றம் கூறி காலத்தை வீணாக்குவாதால் நமக்கு இழப்பு என்பதை அறியவேண்டும். மற்றவரை குறை கூறி கொண்டு நம் இலக்கை தவறவிடுகிறோம். நல்ல நட்பை இழக்கிறோம். நல்ல பெயரை இழக்கிறோம். மற்றவரின் வெறுப்புக்கு ஆட்ப்படுகிறோம்.

    ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்படுகிறோம். அவளிடம் விருப்பதைக் கூற வேண்டும். அவளோடு சேர்ந்து வாழ வேண்டும். அவளை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நிறைய சம்பாதிக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க நல்ல வேலை வேண்டும். நல்ல வாழ்க்கை அமைய ஆசை.

    இந்த ஆசையை அடை நிறைய பணம் முயற்சி எடுப்பதற்கு நேரம் இவை இரண்டும் முக்கியமானவை.

    இதை விடுத்து அடுத்தவர் ஏன் அதிகம் சம்பாதிக்கிறார் என்று ஆராயந்தால் நம் ஆசை நிறைவேறா ஆசையாகிவிடும்.
 
(திரு.நாகராஜ் அவர்கள் அனுப்பியது)

Comments

Popular Posts