நாம் விட்டாலும் நம்மை விடாத சாதி!

    சாதியை விட நினைப்பவர்களையும் சாதி விடுவதில்லை.

    இங்கு ஒரு கதைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது. இரண்டு இளைஞர்கள் பெருக்கெடுத்தோடும் ஆற்றின் கரையில் நின்றிருந்தனர். அப்பொழுது வெள்ளத்தில் ஒரு மரக்கிளையும், அதில் கருப்பாக ஒரு பொருளும் மிதந்து செல்வதைப் பார்த்தனர். இருவரில் ஒருவன், ‘அந்தக் கருப்பாகத் தெரிவது கம்பளிதான். நான் எடுத்து வருகிறேன்’ என்று ஆற்றில் குதித்து, நீந்திச் சென்று அந்தக் கரும்பொருளைப் பிடித்தான். பிடித்தவன் கரையேறாமல் அந்தக் கரும்பொருளோடு வெள்ளத்தில் செல்வதைக் கண்ட நண்பன், ‘அதை விட்டு விட்டுத் திரும்பி வா’ என்று குரல் கொடுத்தான். கரும்பொருளைக் கைப்பிடித்த நண்பன், ‘நான் விட்டு விட்டேன்; அது என்னை விடமாட்டேன் என்கிறதே’ என்றான். உண்மையில் அந்தக் கரும்பொருள் கம்பளியன்று, ஒரு கரடி. அவன் விட்டாலும் கரடி அவனை விடுவதாக இல்லை. சாதி அந்தக் கரடி போன்றது. நாம் விட்டாலும் அது நம்மை விடுவதாக இல்லை.                            
 
                                       [சமுதாயச் சிந்தனைகள், பக்.26-27]

Comments

Popular Posts