ஆதாம்மின்ட மகன் அபு (மலையாளத் திரைப்படம்)

60 வயது மதிக்கதக்க அபு என்கிற  முஸ்லீம் இனத்தவர் ஒருவரின் கதையை இந்தத் திரைப்படம் சொல்கிறது. மகனால் கைவிடப்பட்டு தன் மனைவியுடன் தனிமையில் வசிக்கும் இவருக்கு அஜ் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்பது வெகுநாளைய விருப்பம், வாசனைதிரவியங்களை தெருஓரத்தில் இட்டு விற்கும் ஒரு சாதரண நபர். மனைவி வீட்டில் ஒரு மட்டை வைத்து அதிலிருந்து வரும் பாலை விற்கு இருவரும் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இவர்களது வருமானத்தில் பெரும் பகுதியை அஜ்பயணத்திற்காக சேமிக்கிறார்கள். ஒரு நாள் அஜ் பயணம்  மோற்கொள்ள முடிவெடுத்து அதற்காக ஒரு தனியார் பயணஏற்பாட்டாளரிடம் செல்கிறார் அபு. அங்கு உள்ள நிர்வாகி அவருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வழிமுறைகளை சொல்கிறார். அதன்படி தன் மனைவிக்கும் தனக்கும் பாஸ்போர் எடுக்கிறார். தனது சேமிப்பு அனைத்தையும் அந்த பயணஏற்பாட்டளரிடம் கொடுக்கிறார். மீதித்தொகையை விரைவில் தருவதாக  சொல்கிறார். அதற்காக தன்வீட்டில் வளரும் பாலா மரத்தை ஒருவரிடம் விற்பதற்காக விலை கேட்கிறார். அவரும் இவரது தேவையை மனதில் கொண்டு 60,000 ரூபாய் தருவதாக சொல்லி 10,000 முன்பணம் தருகிறார். 

மீதித்தொகைக்காக தனது மாட்டையும் விற்றுவிடுகிறார். சிலநாட்கள் கழிகிறது. தனது பயணத்திற்கு தயாரகிறார். ஊரில் உள்ள அனைவரிடமும் விடைபெற நினைத்து ஒவ்வொருவராக சந்தித்து விடைகேட்கிறார். மீதித்தொகைக்காக மரம் அறுக்கப்படுகிறது. அப்போது தான் மரம் அந்த விலையளவுக்கு தரமானதாக இல்லை என்பது மரத்தை வாங்கியவருக்கு தெரியவருகிறது. ஆனாலும் அந்தத்தொகை தர அவர் முன்வருகிறார். ஆனால் அதை ஏற்க அபு மறுத்துவிடுகிறார். இதனால் அவரது பயணம் தடைபடுகிறது. அதை அறிந்த அவரது இந்து மதத்தை சார்ந்த நண்பர் தான் 50,000 ரூபாய் தருவதாக சொல்கிறார். அபு அதற்கு ரத்தபந்தம் உள்ள உறவினர் தவிர வேறு யாரிடமும அஜ்பயணத்திற்காக பணம் வாங்கக்கூடாது என்று குரான் சொல்கிறது என சொல்லி மறுத்துவிடுகிறார்.
பயணஏற்பாட்டாளரிடம் தனது பயணத்தை ரத்துசெய்யும் படி கோருகிறார். அந்த நிர்வாகி ஒரு முஸ்லீம் ஆகையால் அந்தத்தொகையை தரவில்லை என்றாலும் பரவாயில்லை. எனது தாய் தந்தையார் அஜ்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் என்னால் அதை நிறைவேற்றிவைக்க இயலவில்லை ஆகவே இந்தத் தொகையை உங்களுக்காக நான் செலுத்திவிடுகிறேன் என்கிறார். அதற்கு அபு நீங்கள் செலுத்திய தொகையுடன் நான் பயணம் செய்தால் அது எனது அஜ்பயணமாக இருக்காது. உங்களது தாய் தந்தையருக்கான பயணமாகத்தான் இருக்கும் என்று சொல்லி மறுத்துவிடுகிறார். பணத்தை வாங்கிக்கொண்டு வீடுதிரும்பும் அபு தன் பயணம் எதற்காக தடைபட்டது என்பதை எண்ணிப்பார்க்கிறார். அப்போது அவருக்கு தான் செய்த தவறு புரிகிறது. அஜ்பயணத்திற்காக தனது மரத்தை அறுத்தது தான் அது, அதுவும் ஒரு உயிர் அல்லவா என்பதை எண்ணிப்பார்க்கிறார். மறுநாள் விடிந்ததும் அந்த மரம் இருந்த இடத்தில் வேறொரு மரக்கன்றை நடுகிறார் இத்துடன் படம் முடிகிறது.

அடிதடி, குத்துப்பாட்டு, பெரிய நடிகர்கள்  என்று வரும் படங்களைப் பார்த்து பழக்கப்பட்டுப்போனவர்களுக்கு இந்தப்படம் ஒரு சிறந்த படமாக இருக்கும். மேலும் இதில் நடித்திருப்பவர் மலையாளத்தில் சிறுசிறுவேடங்களில் நகைச்சுவை கதாபத்திரத்தில் நடிக்கும் சலீம்குமார் என்ற நடிகர் இதில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்துகாட்டியிருக்கிறார். இதற்காக இவருக்கு தேசியவிருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

Comments

Popular Posts